உங்கள் வாழ்க்கையில் தீரவே தீராத எல்லா பிரச்சினைக்கும் தீர்வு பெற அமாவாசையில் கோவிலில் இதை மட்டும் செய்தாலே போதுமே!

amavasai-temple
- Advertisement -

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு விதமான பிரச்சினைகள் இருக்கும். சில பிரச்சனைகள் விரைவாக தானாகவே தீர்ந்து விடும். ஆனால் ஒரு சில பிரச்சினைகள் எவ்வளவு போராடினாலும் தீர்ந்த பாடில்லை என்கிற நிலைமை தான் இருக்கும். சிலருக்கு நீண்ட நாட்களாக ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் இருந்து வரலாம். இன்னும் சிலருக்கு என்ன தான் முன்னேற நினைத்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பதே இருக்காது. இப்படி ஒவ்வொருவருக்கும் இருக்கும் தீரவே தீராத பிரச்சனைக்கு தீர்வு தரக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் தான் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

amavasai

சில பிரசித்தி பெற்ற கோவில்களில் அமாவாசை தினம் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும். அக்கோவிலில் பக்தர்கள் இரவில் வந்து தங்குவது வழக்கமாக இருக்கும். அவர்கள் எதற்காக கோவில் அன்றைய தினம் தங்குகிறார்கள் தெரியுமா? அமாவாசை தினத்தில் நாம் கோவிலில் நம்முடைய தலையை வைத்து படுத்துக் கொண்டால் போதும்! நம் வாழ்க்கையில் இருக்கின்ற அத்தனை பிரச்சனைகளும் சுலபமாக நீங்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

அமாவாசை தினத்தில் கோவிலில் தங்கி, கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு, முழு பக்தியுடன் இறைவனை நினைத்து கொண்டிருந்தால் செய்கின்ற பிரார்த்தனைகள் எதுவாக இருந்தாலும் அப்படியே பலிக்கும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை மனதில் போட்டு குழப்பிக் கொண்டு இருக்காமல் கடவுளிடம் பிரார்த்தனையாக வையுங்கள்.

night-sleep-temple

ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் அருகில் இருக்கும் அமாவாசைக்கு பிரசித்திப் பெற்ற கோவிலுக்குச் சென்று அங்கிருக்கும் மூலவரை தரிசனம் செய்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அன்றைய நாள் முழுவதும் அங்கேயே தங்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் இரவு அமாவாசை தினத்தில் கோவிலில் தங்குபவர்களுக்கு நல்ல ஒரு தன்னம்பிக்கை வளரும். வாழ்க்கையே வெறுத்து போனவர்கள் கூட நிச்சயம் நம்மாலும் எதையாவது சாதிக்க முடியும் என்ற எண்ணம் வரும்.

- Advertisement -

எவ்வளவோ வேண்டுதல்களை நீங்கள் இது வரை வைத்திருக்கலாம், எவ்வளவோ கடவுள்களை தரிசனம் செய்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் அந்த கோவிலில் அமாவாசை தினத்தில் தங்குவதால் கிடைக்கக் கூடிய நன்மைகளை நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அதிகமாகவே இருக்கும். அந்த அளவிற்கு சிறப்பு மிக்க அமாவாசை தினத்தை கோவிலில் சென்று ஒரு நாள் செலவிட்டால் போதுமே! உங்கள் பிரச்சனை தீரும் வரை ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று அந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள கடவுள்களுக்கு மணமிக்க மலர்களை சாற்றி, அவர்களுக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.

Buttermilk

பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு நீர் மோர் தானம் கொடுக்கலாம். அமாவாசையில் பசுக்களுக்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுப்பது சிறப்பான பலன்களை கொடுக்கும். பிறகு அன்றைய நாள் இரவில் உங்களுக்கு கிடைத்ததை சாப்பிட்டு விட்டு அல்லது விரதம் இருப்பவர்கள் விரதம் மேற்கொண்டு இருக்கலாம். இப்படி அமாவாசை தினங்களில் நாம் செய்வதால் நம் வாழ்க்கையில் தீரவே தீராது என்று நினைத்த பிரச்சனைகள் கூட விரைவாக தீர்ந்து விடும். இது காலம் காலமாக பெரும்பாலான பக்தர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். நீங்களும் தெரிந்து கொண்டு பயனடையலாமே!

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில் காலணிகளை இப்படித்தான் வைப்பீர்களா? அப்படின்னா, பணம் உங்க பக்கத்துல கூட நிக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -