உங்களுடைய வீட்டில் காலணிகளை இப்படித்தான் வைப்பீர்களா? அப்படின்னா, பணம் உங்க பக்கத்துல கூட நிக்காது.

cheppal
- Advertisement -

பணம் நம்முடைய வீட்டில் தங்காமல் போவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், குறிப்பாக நம் வீட்டு நில வாசல் படிக்கு வெளி பக்கத்திலேயே கழட்டி விடக்கூடிய காலணிகளும் ஒரு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த காலணிகளை எப்படி வைக்க வேண்டும், எப்படி வைக்கக்கூடாது, காலணிகளை எப்படி வைத்தால் நம் வீட்டிற்குள் நுழைய கூடிய எதிர்மறை சக்திகளை தடுத்து நிறுத்த முடியும், என்பதை பற்றிய சின்னசின்ன குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பை பின்பற்றி விட்டால், கோடீஸ்வர யோகத்தை பெற்றுவிடலாம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் பண கஷ்டத்திற்கான விடிவுகாலம் பிறக்க இந்த குறிப்பு உங்களுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்கலாம்.

seruppu

முதல் தவறு செருப்பை நில வாசல் வரை கொண்டுவந்து, நில வாசப்படிக்கு பக்கத்தின் கழட்டி விடுவது. இந்த பழக்கத்தை நிறுத்தி விடவேண்டும். நில வாசலுக்கு கொஞ்சம் தள்ளிதான் காலணிகளை கழட்டி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியிடங்களுக்கு செல்லும்போது காலணிகளில் மிதிபடும் எதிர்மறை ஆற்றல்கள், மிதிக்க கூடாத பொருட்கள் நில வாசப்படியில் வந்து தங்கி விட்டால், அது நம்முடைய வீட்டிற்கு தரித்திரத்தை தேடி தர, ஒரு காரணமாகி விடுகின்றது.

- Advertisement -

அடுத்தபடியாக நிறைய பேர் வீடுகளில் இந்த தவறு நடக்கிறது. நில வாசல் படிக்கு வெளியே, பக்கத்திலேயே, இரும்பினால் செய்யப்பட்ட செருப்பு ஸ்டாண்டை வைத்து, அதன் மேலே செருப்பினை அடுக்கி வைப்பது. இப்படி இருந்தால் மகாலட்சுமி வீட்டிற்குள் நிச்சயமாக நுழைய மாட்டாள். முடிந்தவரை வீட்டு வாசலில் வைக்கக்கூடிய செருப்பு ஸ்டாண்டை, பிளாஸ்டிக் அல்லது மரக் கடையில் வாங்கி வைத்துக் கொள்வது தான் சிறந்தது.

seruppu-slipper

அந்த செருப்பு ஸ்டாண்டை நில வாசற்படிக்கு பக்கத்தில் வைக்க வேண்டாம். முடிந்தவரை ஆணி அடித்து வாசலுக்கு நேராக இல்லாமல், பக்கவாட்டில் மேல் பகுதியில் மாட்டிவிடலாம். அப்படி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். சரியாக வீட்டு வாசலில் நுழையும் போது செருப்பு வாசமும், இரும்பு காலணி ஸ்டேன்டும் கட்டாயம் இருக்கக் கூடாது.

- Advertisement -

வீட்டிற்கு வெளியிலேயே ஒரு பக்கெட்டில் தண்ணீரை வைத்து, செருப்பு காலோடு உங்கள் கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் நுழைவது இன்னும் சிறப்பானது. தொடக்கூடாததை, உங்களது காலணிகள் மிதித்திருந்தாலும், அதற்கான தீட்டு உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்கும். உங்கள் வீடு, கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலிருந்து என்றுமே பாதுகாப்பாக இருக்க, காலணிகளுடன் வீட்டு வாசலுக்கு வெளியில் தண்ணீர் ஊற்றி கழுவுவது மிக மிக நல்லது.

cheppal

தொடர்ந்து இந்த பழக்கத்தை செய்து வாருங்கள். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இதன் மூலம் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கும். எதிர்மறை ஆற்றல் தாக்காமல் இருக்கும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படாது. அதேசமயம் ஆன்மீக ரீதியாகவும் இது நமக்கு பல நன்மைகளை தரக் கூடியது. முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல மாற்றத்தை உணர்வீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அஞ்சறை பெட்டியில், குடும்பத் தலைவியின் கையால் இந்த 1 பொருளை நிரம்ப வைத்தாலே போதும். பெண்களின் கையில் கட்டுகட்டாக பணம் கட்டாயம் இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -