முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் போது ஒருபோதும் இந்த தவறை செய்யாதீங்க. இந்த சின்ன தவறு நம் தலைமுறைக்கே முன்னோர்களின் சாபத்தை வாங்கி தந்துவிடும்.

aani-amavasai
- Advertisement -

ஒருவர் இருக்கும் போதே அவர்களை நல்லவிதமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இறந்த பிறகு அவர்களை அதைவிட ஒரு படி மேலே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏன்னெனில் இறந்த பிறகு ஆத்மாவாக மாறி, இருக்கும் போது அவர்களால் உயிருடன் இருக்கும் போது செய்ய முடியாத நன்மைகளை இறந்த பிறகு செய்வார்கள் என்பது ஒரு நம்பிக்கை. அதற்கு நாம் அவர்களை முறையாக வழிபட வேண்டும். அப்படி வழிபட தவறுபவர்கள் வாழ்க்கையில், பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள். இந்த திதி என்பது ஒருவர் இறந்து, ஒரு வருடம் கழித்து வரும் வருடாந்திர திதியை மட்டும் தான், திதி கொடுக்கும் நாளாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது அப்படி அல்ல, இந்த வருடாந்திர திதி முக்கியமானது தான். ஆனால் அதற்காக மாதம் மாதம் வரும் அம்மாவாசை திதியை நாம் விட்டு விடக்கூடாது.

நாம் நிறைய பேர்களை பார்த்திருப்போம். எவ்வளவு சம்பாதித்தாலும் நிற்பதில்லை என்று புலம்புவர்கள். அவர்கள் எந்த தொழில் துவங்கினாலும் அதில் நஷ்டம் ஏற்படும். வீட்டில் ஏதாவது குறையோடு குழந்தை பிறந்திருக்கும். வீட்டில் இருப்பவர்களுக்கு திருமண வயது வந்தும் கூட திருமணம் ஆகாமல் இருப்பர்கள். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். மந்தமான பிள்ளைகள் இவ்வளவு ஏன், எதற்கு தான் வாழ்கிறோம் என புலம்பும் அளவிற்க்கு அவர்களுக்கு துன்பம் இருக்கும். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால் கண்டிப்பாக பித்ரு தோஷம் ஆகத்தான் இருக்கும். பித்ரு தோஷம் என்பது இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைந்து நம்மை வாழ்த்தவில்லை என்பதையே குறிக்கும்.

- Advertisement -

இப்படி பித்ரு தோஷம் வரமால் இருக்க, நம் முன்னோர்களை முறைப்படி வணங்க வேண்டும். இதற்கு மாத மாதம் வரும் அமாவாசை திதியில் இறந்தவர்களுக்கு பிடித்ததை சமைத்து படையல் போட்டு, அவர்களை வணங்க வேண்டும். இந்நாளில் நிச்சயம் நாம் ஏழை, எளியவர்களுக்கு நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருட்களையோ, உணவுகளையோ, ஏதோ ஒன்று உங்களால் என்ன முடியுமோ, அதை தானமாக கொடுத்தால், இறந்தவர் இவர்களில் யாரோ ஒருவர் மூலமாக வந்து உங்களுடைய அந்த தானத்தை பெற்றுக் கொள்வார் என்ற ஒரு ஐதீகம் உண்டு.

அதே போல் ஒரு குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் மூத்தவர் மட்டுமே தொடர்ந்து அமாவாசை திதி கொடுத்துக் கொண்டிருப்பார். மற்ற மூவரும் பெரியவர் கொடுக்கிறாரே, நாம் ஏன் கொடுக்க வேண்டும் என்று இருப்பார்கள். அதுவும் தவறானதாகும். மற்ற மூன்று பிள்ளைகளும் கட்டாயம் திதி கொடுக்க வேண்டும். இதில் எள்ளும், தண்ணீரும் இரைப்பதை கொள்ளி வைத்தவர் மட்டும் தான் செய்ய வேண்டும். மற்ற  பிள்ளைகள் செய்ய கூடாது. மற்றபடி அமாவாசை திதியில் சாதம் வைத்து படையில் போடுவது, யாருக்கேனும் தானம் கொடுப்பது, இது போன்றவற்றை நிச்சயமாக மற்ற பிள்ளைகளும் செய்ய வேண்டும்.

- Advertisement -

அதிலும் சிலர் உண்டு வருடம் தோறும் வருடாந்திர திதி கொடுப்பார்கள். மாதந்தோறும் அமாவாசை திதியும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும் முறையாக செய்தாலும், அவர்களுடைய குடும்பத்தில் கஷ்ட நிலை, மன நிம்மதியின்மை, தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் இந்த திதிகளை கொடுக்கும் போது முழு மனதோடு கொடுக்க வில்லையென்று அர்த்தம்.

திதி கொடுக்கும் போது நாலு பேரையாவது கூப்பிட்டு சாப்பாடு போட வேண்டும் என்று கூறுவார்கள். இதை நாம் போடும் போது இத்தனை பேருக்கு சமைத்து இவ்வளவு கஷ்டப்பட்டு செய்ய வேண்டி இருக்கிறது என்று சிறு அளவில் மனதில் நினைத்தால் கூட போதும். நீங்கள் கொடுக்கும் திதிக்கான பலனை இழந்து விடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு திதி கொடுக்கவில்லை என்று ஆன்மாவுக்கு நிச்சயம் தெரியும். முழு மனதோடு கொடுக்கப்படாத திதி தர்ப்பணத்தை முன்னோர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் முன்னோர்களின் சாபத்திற்கு உங்கள் குடும்பம் ஆளாவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அதனால் தான் எதை செய்தாலும் முழு மனதுடன் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். இனி மேலாவது இந்த அமாவாசை திதியை முறைப்படி கொடுத்து நம் முன்னோர்களின் ஆசீர்வாதத்தை பெற்று நல்ல முறையில் வாழ்வோம்.

- Advertisement -