நாளை அமாவாசை நாளில் இதையெல்லாம் தவறாமல் செய்பவர்களை பித்ரு சாபம் மட்டும் இன்றி வேறு எந்த சாபமும் நெருங்காமல் காத்து செல்வ செழிப்போடு வாழ பித்ருக்கள் துணை நிற்பார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வழிபாட்டிற்கும் நம்முடைய சாஸ்திரங்கள் பல்வேறு வழிமுறைகளையும், விதிகளையும் கூறி இருக்கிறது. இன்றளவும் அதன்படி தான் ஒவ்வொரு வழிபாடும் நாம் செய்து வருகிறோம். அந்த வகையில் இந்த அமாவாசை வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்றும் ஒரு சில நியதிகளை நமக்கு வகுத்துக் கொடுத்திருக்கிறது. அதன்படி செய்யும் போது தான் இன்றைய நாளில் நாம் முன்னோர்களை வழிபடுவதற்கான பலனை முழுமையாக பெற முடியும். அதை குறித்தான தகவலை தான் இப்போது இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

அமாவாசை நாளில் செய்ய கட்டாயமாக செய்ய வேண்டியது
இந்த நாளை நாம் காலையில் துவங்கும் போது நம் முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக தொடங்க வேண்டும். அதை எப்படி செய்ய வேண்டும் எனில் அன்றைய தினம் நம்முடைய வாசலில் கோலம் இடக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த கோலம் இடக் கூடாது என்பதற்கு இரண்டு காரணங்களை சாஸ்திரங்கள் சொல்கிறது. ஒன்று கோலமிடுவது மங்கள விஷயத்தை குறிக்கும். அம்மாவாசை தினம் என்பது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது தான் முதன்மையான காரியமாக இருக்க வேண்டுமே தவிர மங்கள வழிபாட்டிற்கான நாளாக இருக்கக் கூடாது. அது மட்டும் இன்றி அன்றைய தினம் முன்னோர்கள் நம் இல்லம் தேடி வரும் போது எப்போதும் போல் கோலமிட்டு இருந்தால் இவர்கள் அன்றாட பணிகளை செய்கிறார்கள். நமக்கான நாளாக இந்த நாளை அவர்கள் பார்க்கவில்லை என்று உள்ளே வராமல் சென்று விடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆகையால் இன்றைய தினத்தில் கோலம் இடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அடுத்து குடும்பத் தலைவிகள் கடைபிடிக்க வேண்டியது அமாவாசை தினத்தில் குடும்பத் தலைவிகள் தலை ஸ்தானம் செய்யாமல் இறந்த முன்னோர்களுக்கு சமைக்க கூடாது என்று ஆகமங்கள் சொல்கிறது. அமாவாசை தினத்தில் தாய் தந்தையர் இருந்தாலும் கூட இதை கடைப்பிடிக்க வேண்டும். அதே அமாவாசை போல் குடும்பத் தலைவிகள் விரதம் இருந்து சமைக்க கூடாது. குறிப்பாக கணவன் இருக்கும் பட்சத்தில் அமாவாசை விரதத்தை கடைபிடிக்க கூடாது.

- Advertisement -

அமாவாசை தினத்தில் ஆண்கள் செய்யக் வேண்டியது
பெற்றோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இதை கோவில்களில் செய்யலாம் . வருடத்திற்கு ஒரு முறை திதி கொடுப்பவர்கள் காலையிலே எழுந்து தலை ஸ்தானம் செய்து விட்டு அமாவாசை விரதத்தை தொடங்க வேண்டும். அன்று முன்னோர்களுக்கு படைப்பதற்கு முன்பாக அவர்கள் உண்ணக் கூடாது.

ஒரு சில வீடுகளில் இரண்டு மூன்று பிள்ளைகள் இருப்பார்கள் மூத்தவர் கொள்ளி போட்டு இருப்பார். எனவே அவர் மட்டும் விரதம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இருக்கக் கூடாது அவர் மட்டும் தான் எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். மற்றபடி விரதம் வழிபாடுகள் இவைகளை அனைத்தை மகன்களும் செய்ய வேண்டும் செய்ய வேண்டும். அவர்களும் அன்றைய தினத்தில் முன்னோர்களுக்கு வீட்டில் படையில் போட்டு காகத்திற்கு சாதம் வைத்த பின்பு தான் உணவு அருந்த வேண்டும். பெண் பிள்ளைகளாக இருந்தால் இவையெல்லாம் செய்யாமல் முன்னோர்களை நினைத்து சாதம் படையல் வைத்து காக்கைக்கு வைப்பதை மட்டும் செய்யலாம்.

- Advertisement -

இந்த அமாவாசை தினத்தில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் அன்னதானம். அன்றைய தினத்தில் யாரேனும் ஒருவருக்காகவாது நிச்சயம் நம் கையால் உணவு வாங்கி கொடுக்க வேண்டும். ஒரு வேலை உங்களால் யாருக்கும் வாங்கிக் கொடுக்க முடியவில்லை எனும் பட்சத்தில் பறவைகளுக்கு, வாயில்லா ஜீவராசிகளுக்கு உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை வாங்கி கொடுக்கலாம். ஆனால் இவற்றை நம் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு செய்யக் கூடாது.

அமாவாசை நாளில் நம் இல்லத்திற்கு யாரேனும் வந்து விட்டால் அவர்களுக்கு உணவு அளிக்காமல் அனுப்பக் கூடாது. ஏனெனில் வருபவர்களில் யாரேனும் ஒருவராக நம் முன்னோர்கள் இருப்பார்கள் என்று ஐதீகம் உண்டு. ஆகையால் அன்றைய தினத்தில் உங்கள் இல்லம் தேடி வருபவர்களுக்கு நிச்சயம் வயிறார சாப்பிட வைத்து அனுப்புவது உங்களுக்கும் உங்கள் சந்ததியினரும் செல்வ செழிப்புடன் வாழ வழி வகுக்கும்.

மற்ற தெய்வங்கள் நம் குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் குலதெய்வத்தை கேட்டு தன செய்வார்கள். நம் முன்னோர்களின் அனுமதி இல்லாமல் குலதெய்வமே கூட நமக்கு நன்மை செய்ய மாட்டார்கள். ஏனெனில் உங்களை குலதெய்வத்திற்கு அறிமுகம் காட்டியதே முன்னோர்கள் தான். எந்த வழிபாட்டையும் விட முக்கியமானது முன்னோர் வழிபாடு தான். இந்த அமாவாசை தின வழிபாட்டு முறைகளை சரியான முறையில் செய்பவர்கள் இல்லத்திற்கு எந்த தீங்கும் வராது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தினமும் இதை மட்டும் பார்த்தால் போதும். அடுத்தவர்கள் கண் திருஷ்டியால் உங்கள் குடும்பத்திற்கு எந்த ஆபத்தும் வராது.

இன்றைய நாளில் இதையெல்லாம் தவறாமல் செய்பவர்களுக்கு எந்த வித தோஷங்களும் தாங்காமல் அவர்கள் குடும்பத்தை பித்ருக்கள் துணை நின்று காப்பார்கள் என்று ஆணித்தரமாக சொல்லப்படுகிறது. இனி அமாவாசை வழிபாட்டை இந்த முறையில் கடைபிடித்து நம் குடும்ப நல்ல முறையில் வாழ நாம் வழி தேடி கொள்ளலாம் என்று தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -