உங்களுக்கு அதிக செல்வமும், நீண்ட ஆயுளும் உண்டாக ஜாதகத்தில் இவை முக்கியம்

surya-chandra

பகலில் சூரியன் உலகத்திற்கு வெப்பத்தையும், ஒளியையும் தருகிறது. இரவில் சந்திரன் குளுமையையும், ஒளியையும் பூமியில் செலுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் நமது தந்தைக்குரிய கிரகமாகவும், சந்திரன் நமது மனது மற்றும் தாயாருக்கு காரகத்வம் கொண்ட கிரகமாகவும் கருதப்படுகிறது. சமமான அதே நேரத்தில் எதிர் பதமான தன்மைகளைக் கொண்ட இந்த சூரிய – சந்திர கிரகங்கள் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Nakshatra

ஒரு நபரின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு வீடு அல்லது ராசியில் தந்தைக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகமான சூரியன், தாய்க்கு காரகத்துவம் வகிக்கும் கிரகமான சந்திரனும் இணைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு அமாவாசை யோகம் ஏற்படுகிறது. இந்த அமாவாசை யோகம் ஏற்பட்ட ஜாதகருக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும் என பெரும்பாலான ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறியிருக்கின்றன.

அமாவாசை யோகத்தில் பிறந்த ஜாதகருக்கு சந்திர கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அந்த நபர் கவிதைகள் இயற்றுவதில் வல்லவராகவும், ஓவியம் சிற்பம் போன்ற கலைகளில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருப்பார். இக்கலைகளின் மூலம் மிகுந்த புகழும், செல்வமும் பெற கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கக்கூடும். அதே வேளையில் சூரிய கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்தவர்கள் கதை, கட்டுரை எழுதுவதில் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பத்திரிக்கை துறை ஆசிரியர், எழுத்தாளர் ஆகிய பணிகளில் சிறந்து விளங்கி மிகுந்த புகழும், பொருளும் ஈட்டுவார்கள்.

புலிப்பாணி சித்தர் எழுதிய ஜோதிட கணிப்பு படி ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன் இணைந்து 1, 5, 9 ஆம் வீடுகளில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு மிக அதிக அளவில் செல்வம் சேர்க்கை உண்டாகும். ஆடம்பரமான, வசதிமிக்க வீடு கட்டும் யோகம் ஏற்படும். எதிரிகளுக்கு அஞ்சாத நிலை மற்றும் அனைத்து விதமான சுகபோகங்களை அனுபவிக்கும் யோகமும் ஏற்படும். இத்தகைய ஜாதக அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 70 முதல் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார் என புலிப்பாணி சித்தர் ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் சூரியன் இப்படி இருந்தால் ஏற்படும் பலன்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Amavasai yogam in Tamil. It is also called as Surya chandra palangal in Tamil or Jathagam palan in Tamil or Surya chandra yogangal in Tamil or Jathaga yogangal in Tamil.