தினம் தினம் திருப்பதி கருவறையில் நடக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?

tirupathil

வருடத்தில் ஒருமுறை தான் நம்மில் பலரால் திருப்பதி செல்லமுடிகிறது. அதிலும் அங்கு இருக்கும் கூட்டத்தில் பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னர் தான் சாமியை தரிசிக்கவே முடிகிறது. அதற்குள் அங்கிருப்பவர்கள் ஜருகண்டி, ஜருகண்டி என்று கூறி நம்மை பிடித்து தள்ளிவிட்டு விடுகிறார்கள்.

tirupati

கூட்ட நெரிசலில் கோயில விட்டு வெளியில் வந்த பிறகு தான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..” என்று எல்லோரும் அங்கலாய்ச்சிருப்போம்.

கூட்ட நெரிசலால் தான் சாமிய சரியா பார்க்க முடியவில்லை, அவரிடம் நம் பிராத்தனையை சொல்லமுடியவில்லை என்று நாம் நினைத்திருப்போம். ஆனால் அதெலாம் உண்மையா ?என்றால் நிச்சயம் இல்லை. சுவாமியை நாம் தரிசிக்கும் இடத்தில் இருக்கும் ஒரு விசேஷ சக்திதான் இப்படி ஞாபக சக்தியோடு விளையாடுகிறது என்று கூறுகிறார் டாக்டர் ரமண தீட்சிதர்.

tirupathi balaji

இதை கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. நம்மை மட்டும் ஒரு நொடிகூட முழுமையாக சுவாமியை பார்க்க விடுவதில்லையே ஆனால் இவர்கள் எல்லாம் (கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்கில் சுவாமியோடு இருக்கிறார்களே என்று சிலருக்கு பொறாமை கூட இருக்கும். ஆனால் அவர்களுக்கும் இப்படி தான் நினைவுகள் அழிக்கப்படுவதாக ரமண தீட்சிதர் குறிப்பிடுகிறார்.

- Advertisement -

tirupadhi

சுவாமியை பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதில் இருந்து விதிவிலக்காம்..சரி கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்? என்பது குறித்து டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம் வாருங்கள்.

elumalayaan

சுவாமியை பார்த்தவுடன் வேண்டுதல்கள் மறந்து போவதும், தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும் சுவாமியின் அலங்காரம் மறந்துபோவதும் திருப்பதியில் தினம் தினம் எல்லோருக்கும் நடக்கும் ஒரு விசித்திர அனுபவம். நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணம் என்னவென்றால் கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

perumaal

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும், சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும், குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும், பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும், அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும், அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும், அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

venkatajalapathi

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, It’s going blank எங்கிரு ஆங்கிலத்தில் கூறுவார்கள்..

tirupadhi

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்(loss of memory happens ).
அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது (deleting the memory). இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”