உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்க இந்த ஒரு பரிகாரம் செய்யுங்கள் போதும்

amman

கல்வி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தற்காலத்தில் மிகவும் அவசியமாக இருக்கிறது. மிகப்பெரும் பட்டப்படிப்புகள் படிக்காவிட்டாலும் சிறந்த தொழிற்கல்விகள் மற்றும் இதர வேலை வாய்ப்புகளைத் தரும் கல்வி கற்பது நல்லது. ஆனால் தற்காலங்களில் பலருக்கு தங்களின் பிள்ளைகள் சரிவர கல்வி கற்காத நிலை குறித்து கவலை உண்டாகிறது. அதுபோல சிறந்த முறையில் கல்வி கற்றிருந்தாலும் தகுதியான வேலை கிடைக்காமல் பலரும் வேதனைப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்களின் பிரச்சனைகள் விரைவில் தீருவதற்கான ஒரு எளிய ஆன்மீகப் பரிகாரத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Amman-temple

அனைத்து குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றாலும் ஒரு சில குழந்தைகள் மட்டுமே கல்வி கற்பதில் சிறந்த விளங்குகின்றன. அதேபோன்று நன்றாக கல்வி கற்று முடித்த பின்பு அனைவருக்கும் சுலபத்தில் வேலை கிடைத்து விடவில்லை. படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க பல ஆண்டு காலம் காத்திருக்க வேண்டிய நிலையும் தற்போது உருவாகி வருகிறது. ஆக மொத்தத்தில் நமக்கு சிறப்பான கல்வி அமையவும், நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும் நமது முன்னோர்களின் புண்ணிய பலனும் தெய்வ அருட்கடாட்சம் அவசியமாகிறது.

அம்மன் அல்லது அம்பாள் தெய்வ வழிபாடு நமது கோரிக்கைகள் விருப்பங்கள், அனைத்தையும் நிறைவேற்ற வல்லதாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் வருகின்ற வளர்பிறை புதன் மற்றும் வெள்ளிக் கிழமை தினத்தில் அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனுக்கு பச்சை நிற புடவை சாற்றி வழிபாடு செய்வது நல்லது. மேலும் அம்மனுக்கு ஏதேனும் ஆபரணம் செய்து அணிவிப்பதும் அற்புதமான பலன்களை கொடுக்கும்.

green saree

மேற்கண்ட முறையில் அம்மனுக்கு புடவை மற்றும் ஆபரணம் சாற்றி வழிபடுபவர்களின் வம்சத்தில் இருக்கும் குழந்தைகள் அனைவரும் நல்ல முறையில் கல்வி கற்று, சிறப்பான வகையில் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் நீண்ட நெடுங்காலமாக தகுதியான வேலை கிடைக்காமல் அலைந்து திரிந்தவர்களுக்கு கூடிய விரைவில் நல்லவேளை அம்பாளின் அனுக்கிரகத்தால் கிடைக்கப் பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் வீட்டில் பணத்தட்டுப்பாடு நீங்க இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ambal worship in Tamil. It is also called as Ambal valipadu in Tamil or Amman pariharam in Tamil or Velai kidaikka in Tamil or Pachai nira pudavai in Tamil.