சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச இந்திய அணி வீரருக்கு வாழ்நாள் தடை – ஐ.சி.சி அதிரடி முடிவு

rayudu
- Advertisement -

இந்திய அணி சென்ற வருட இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெரிய கிரிக்கெட் தொடரில் விளையாடி அதில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் என்று இரண்டு தொடர்களையும் கைப்பற்றி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது நாம் அறிந்ததே.

indian-team

ஆனால், அந்த தொடரில் நாம் அறியாத ஒரு நிகழ்வு ஒன்று தற்போது நமக்கு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவர் வீசிய பந்துவீச்சு முறை ஐ.சி.சி விதிமுறைகளை மீறி முரண்பாடாக இருந்ததால் அவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பந்துவீச வாழ்நாள் தடைவிதித்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி

- Advertisement -

இந்திய அணியின் பகுதிநேர பந்துவீச்சாளரான அம்பதி ராயுடு ஆஸ்திரேலிய தொடரில் பந்துவீசிய முறை முறைகேடான முறையில் இருந்ததால் அவரின் மீது இந்த நடவடிக்கையினை கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது. மேலும், பரிசோதனைக்கு ராயுடு செல்ல முடியாத காரணத்தினாலும் ராயுடுவிற்கு பந்துவீச வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

rayudu ambati

இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 40 அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரும் கைப்பற்றி சாதனை படைத்தது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

சதத்தை தவறவிட்ட ரோஹித் மற்றும் கோலி ஆனால், செம சாதனை ஒன்றை ஜோடியாக நிகழ்த்தி உள்ளனர்- சாதனை விவரம் உள்ளே

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -