சதத்தை தவறவிட்ட ரோஹித் மற்றும் கோலி ஆனால், செம சாதனை ஒன்றை ஜோடியாக நிகழ்த்தி உள்ளனர்- சாதனை விவரம் உள்ளே

rohit-koli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவல் மைதானத்தில் துவங்கியது. நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் அணி முடிவெடுத்து களமிறங்கியது நியூசிலாந்து அணி அதன்படி துவக்க வீரர்களாக குப்தில் மற்றும் முன்ரோ ஆகியோர் களமிறங்கினர்.

நியூசிலாந்து அணியின் வீரர்கள் அனைவரும் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறிய வண்ணம் இருந்தனர். டெய்லர் மற்றும் லேதம் ஜோடி மட்டும் அந்த அணிக்கு ஆறுதல் தரும் விதமாக அந்த அணியை ஓரளவிற்கு நல்ல ஸ்கோர் குவிக்க உதவினர். டெய்லர் 93 ரன்களும், லேதம் 51 ரன்களை அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 243ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர்.

- Advertisement -

அடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தவான் விக்கெட்டை 28 ரன்களில் இழந்தது. பிறகு, இந்திய அணியின் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இருவரும் அரைசதம் கடந்து சதமடிக்கும் வாய்ப்பில் இருந்தனர் ஆனால், எதிர்பாரா விதமாக ரோஹித் 62 ரன்னிலும் கோலி 60 ரன்னிலும் அடுத்தது ஆட்டமிழந்து வெளியேறினர்.

rohith dhawan

இருப்பினும் ரோஹித் மற்றும் கோலிஇருவரும் இணையாக 2ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்களை சேர்த்தனர். இதன்மூலம் 16 ஆவது முறையாக இவர்கள் ஜோடியாக 100 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்துள்ளனர். இந்திய அணியின் டாப் ஆர்டரில் கலக்கி வருவதற்கு முக்கியம் உதாரணம் இதுவாகும். இந்திய அணியின் வெற்றிக்கு தற்போது 30 ரன்கள் தேவை .

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியை பின்னுக்கு தள்ளிய இந்திய வீரர் – சூப்பர் ரெகார்டு

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -