1000 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் தோன்றிய சிவ லிங்கம். ஆச்சர்யத்தில் அமெரிக்கர்கள்

shiva-temple-compressed (1)

சிவபெருமானுக்கு ஆதிசித்தன் என்கிற ஒரு பெயருண்டு. இதில் ஆதி என்கிற சொல் தொடக்கம், முதல் போன்ற பொருள்களை கொண்டது. உலகில் இன்றைய காலத்தில் பல மதங்கள் இருந்தாலும், உலகின் மூத்த குடியான தமிழ் குடியின் கடவுளாகிய சிவபெருமான் வழிபாடு உலகெங்கிலும் இருந்ததற்கான சான்றுகள் அவ்வப்போது கிடைத்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பிறப்பால் அமெரிக்கரான ஒருவர் சிவபெருமான் தனது கடவுள் என்பதை உணர்ந்ததையும், சிவனின் சைவ மத வளர்ச்சிக்கு அவர் ஆற்றும் தொண்டுகள் பற்றியும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மாகாணமான “ஹவாய்” தீவில் பிறந்த அமெரிக்கர் “ஜான் பெர்க்”. பிறப்பால் கிறிஸ்தவரான ஜான் பெர்கின் தந்தை ஒரு கிறிஸ்தவ மத பாதிரியார் ஆவார். சிறு வயதில் கிறிஸ்தவ மதம் சார்ந்த வாழ்க்கையை வாழ்ந்தாலும், ஒரு கட்டத்தில் இந்து மத சாத்திரங்கள் மற்றும் இந்து மத கடவுளான “சிவபெருமான்” மீது தீவிர ஆர்வமும் பக்தியும் கொண்டிருந்தார். ஒருமுறை இவரது கனவில் தோன்றிய சிவன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சிவ வழிபாடு உலகமெல்லாம் மேற்கொள்ள பட்டது என்றும், அந்த வகையில் இந்த ஹவாய் தீவிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது என்றும், அதில் “கிரிஸ்டல்” கல்லாலான சிவலிங்கம் இருப்பதாகவும், அக்கோவிலை மீண்டும் கட்டியமைத்து உலகமெல்லாம் சைவ மத கோட்பாடுகளை பரப்புமாறு ஆணையிட்டு மறைந்தார்.

இக்கனவை கண்ட ஜான் பெர்க் ஆராய்ச்சிகள் செய்து ஹவாய் தீவில் அக்கோவில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த போது, தனக்கு சிவன் கனவில் கூறியவாறே ஒரு கிரிஸ்டல் கல்லாலான சிவலிங்கம் இருப்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்தார். இதன் பிறகு சிவபெருமானே உண்மையான உலகக்கடவுள் என்பதை உணர்ந்து ஜான் பெர்க் மற்றும் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் தங்களின் கிறிஸ்தவ மத அடையாளங்களை நீக்கி கொண்டு சைவ மதத்திற்கு வாழ்வியல் மதமாக ஏற்று பின்பற்றி வருகின்றனர். ஜான் பெர்கும் தனது பெயரை “சிவ சுப்பிரமணியன்” என மாற்றிக்கொண்டார்.

1970 ஆம் ஆண்டு முதல் ஹவாய் தீவில் “தி ஹிந்து மோனஸ்ட்ரி” என்கிற அமைப்பை நிறுவி சைவ மத சித்தாந்தங்களை பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்கும் போதித்து சிவனின் பால் அவர்களை திருப்பிய ஜான் பெர்க் கடந்த 2001 ஆம் ஆண்டு காலமானார். அவரது சீடர்களும், குடும்பமும் “ஹிந்துயிசம் டுடே” என்கிற உலகளாவிய பத்திரிகையை நடத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சைவ சித்தாந்தங்களை பிறர் அறியச் செய்யும் சேவையோடு, சமூக நல பணிகளையும் சிவனின் ஆணையாக கருதி செய்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
இந்துக்கள் வலுகட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நாடு பற்றி தெரியுமா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான கட்டுரை படிக்க எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we American shiva bakthar in Tamil.