வாழ்க்கை முழுவதும் வளம் கொழிக்க செய்யும் தீபாவளி விரதம்

- Advertisement -

நமது நாட்டில் பலவகையான கலாச்சாரங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த தேசமே ஒன்றாக கொண்டாடும் ஒரு விழாவாக தீபாவளி திருநாள் இருக்கிறது. எந்த ஒரு விழாவும் இறைவனை வணங்கி, தங்களின் வாழ்வில் வசந்தங்கள்நிறைந்திருக்க விரும்பியே கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் நன்மைகளை தரும் இந்த தீபாவளி திருநாளில் செய்ய வேண்டிய ஒரு விரதம் தான் கேதார கௌரி விரதம். இந்த விரதத்தின் மகிமை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

sivan

“கேதாரம்” என்பது இமய மலை சாரலில் இருக்கும் சிவபெருமான் வாசம் புரியும் ஒரு புனித தலமாகும். இங்கு சிவனின் மனைவியான கௌரி “கேதார விரதம் இருந்து சிவனை வழிபட்டு அவருடன் ஒன்றிணைந்ததால் இந்த விரதத்திற்கு கேதார கௌரி விரதம் என்று பெயர் உருவானது. பல அற்புத பலன்களை அளிக்கும் கேதார கௌரி விரதம் மேற்கொள்ளும் முறை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

- Advertisement -

புரட்டாசி மாத வளர்பிறை தசமி தினம் தொடங்கி ஐப்பசி மாத அமாவாசை அதாவது “தீபாவளி” தினத்தன்று வரையான 21 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தின் தொடக்க தினமான புரட்டாசி வளர்பிறை தசமி தினத்தில் 1 வெற்றிலை, 1 பாக்கு, 1 பழம், 1 பலகாரம் ஆகியவற்றை சிவன் மற்றும் பார்வதிக்கு படைத்து வணங்க வேண்டும். தினமும் இந்த பூஜையை செய்து முடித்த பிறகே காலை உணவை உட்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் மேற்கண்ட பொருட்களின் எண்ணிக்கையை விரத தினங்களின் எண்ணிக்கைக்கேற்றவாறு அதிகரித்து கொண்டே சென்று, 21 ஆம் நாளான தீபாவளி தினத்தன்று அனைத்து நிவேதன பொருட்களையும் 21 எண்ணிக்கையில் வைத்து 21 நூலிழைகளான கயிற்றை இறைவனின் படத்திற்கு முன்பு வைத்து, தீபம் காட்டி பூஜை செய்த பிறகு அக்கயிற்றை திருமணமான தம்பதிகளில் ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்ள வேண்டும்.21 நாட்கள் விரதம் மேற்கொள்ள முடியாதவர்களும் தீபாவளி தினத்தன்று 21 இழை கயிற்றை வைத்து, சிவ பார்வதியை வழிபட்டு தங்களின் கைகளில் காப்புக்கயிறாக கட்டிக்கொள்ளலாம்.

sivan

பிறகு பூஜையறையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து, சிவன் மற்றும் பார்வதி தேவிக்குண்டான மந்திரங்களை துதித்து, சிறிது நேரம் தியானத்தில் இருந்து தங்களின் விரதத்தை முடித்து, நைவேத்திய பொருட்களை பிரசாதமாக உண்ணலாம். இந்த “கேதார கௌரி” விரதத்தை கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து மேற்கொள்வதால் குடும்ப ஒற்றுமை சிறக்கும், தம்பதிகளிடையே கருத்துவேறுபாடுகள் மனஸ்தாபங்கள் ஏற்படாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும், குடும்பத்தை பீடித்திருக்கும் தரித்திர நிலை நீங்கி பொருளாதார உயர்வு உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அஸ்வினி நட்சத்திர பரிகாரம்

இது பொபின்ரு மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Deepavali vratham in Tamil.

- Advertisement -