மங்களம் பெறுக செய்யும் அம்மன் போற்றி

Amman (1)

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கூறவேண்டிய மீனாட்சி அம்மன் போற்றி. இதை கூறுவதன் பலனாக வீட்டில் மங்களம் பெருகும். ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பரிபூரணை அருள் கிடைக்கும்.

Meenatchi amman

மீனாட்சி அம்மன் 108 போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே பொற்றி

ஓம் அரசிளங் குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுத நாயகியே போற்றி
ஓம் அருந்தவ நாயகியே போற்றி

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆல்வாய்க் கரசியே போற்றி 10
ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத் தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி

- Advertisement -

ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி 20
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண்திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி

meenatchi amman temple

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க் கினியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி 30
ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக் குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக் கினியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி 40
ஓம் கிளியெந்திய கரத்தோய் போற்றி

ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற் கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி 50
ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்த வல்லியே போற்றி
ஓம் சிங்கார வல்லியே போற்றி

Amman adi perukku

ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி

ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தாய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி 60
ஓம் தமிழர் குலச் சுடரே போற்றி

ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடை யம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி

ஓம் தேன்மொழி யம்மையே போற்றி 70
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர்தம் திலகமே போற்றி

Amman

ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி 80
ஓம் பவள வாய்க் கிளியே போற்றி

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டி மாதேவியின் தேவே போற்றி

ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன் மயிலம்மையே போற்றி

ஓம் பொற்கொடி அன்னையே போற்றி 90
ஓம் மலயத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கல நாயகியே போற்றி
ஓம் மழலைக் கிளியே போற்றி

ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி

ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
ஓம் மீனாக்ஷி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி 100
ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

durgai amman

ஓம் யாழ் மொழி யம்மையே போற்றி
ஓம் வடிவழ கம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேத நாயகியே போற்றி

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

இதையும் படிக்கலாமே:
துர்கை 108 போற்றி

ஜோதிடம், ராசி பலன், ஆன்மீக தகவல்கள், மந்திரம் என அனைத்தையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we have Meenatchi Amman 108 potri or 108 Amman potri in Tamil or Amman 108 potri lyrics in Tamil.