தோஷங்களை நீக்கும் துர்கை அம்மன் 108 போற்றி

dhurgai-Amman
- Advertisement -

பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது திண்ணம். ராகு காலத்தில் துர்க்கையை வழிபடுவதால் தீராத நோய்கள் தீரும், திருமண தடைகள் நீங்கும், குழந்தை பாக்கியம் உண்டாகும், இப்படி மேலும் பல நன்மைகளை உண்டாகும். அந்த வகையில் துர்க்கையை வழிபடும் சமயத்தில் கூறவேண்டிய துர்கை 108 போற்றி இதோ.

dhurgai

துர்கை அம்மன் 108 போற்றி :

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

- Advertisement -

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

- Advertisement -

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி

amman

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

- Advertisement -

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

Mariamman

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

amman

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

Rajakali Amman

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி

veyil ukandha amman

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி

இதையும் படிக்கலாமே:
கர்ம வினைகளை போக்கும் தட்சிணாமூர்த்தி மந்திரம்

உலகில் வாழும் உயிர்கள் எல்லாமே ஆண் மற்றும் பெண்ணின் இணைவால் உருவாகிறது. அதிலும் அந்த உயிரை பெற்று, அன்புடன் அதை வளர்ப்பது பெண்மையின் உச்சமான தாயின் முக்கிய பொறுப்பாக ஆகிவிடுகிறது. அப்படியான நேரத்தில் அந்த குழந்தைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாதவாறு அந்த தாய் காக்கிறாள். அதே நேரம் அந்த குழந்தை அறியாமல் செய்யும் தவறுகளையும் அந்த தாய் பொருத்தருள்கிறாள். இந்த தாயை போன்றவள் தான் நம்மை காத்தருளும் ஆதிபராசக்தியான துர்க்கா தேவி.

Amman

சிவ பெருமானின் உடலில் பாதியாக இருக்கும் அந்த பராசக்தியின் அம்சம் தான் இந்த துர்க்கா தேவி. மகிஷன் என்ற அரக்கனை வதம் புரிந்து, அகிலங்கள் அனைத்தையும் காத்தருள்கிறாள் அன்னை துர்க்கை. வேண்டியவர்களுக்கு கருணை மற்றும் அருளையும், தீய சக்திகளை அழிப்பதில் மஹிஷாஸுரமர்தினியாகவும் இருக்கும் ஸ்ரீ துர்கா தேவியின் இந்த போற்றிகளை உளமார படிப்பதால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
மீனாட்சி அம்மன் காயத்ரி மந்திரம்

தமிழ் மந்திரம், ஜோதிடம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை பெற எங்களது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English Overview:
Here we have Durga 108 potri in Tamil. It is also called as Durga 108 mantra in Tamil. This potri can be used in Rahu kaala Durga pooja to get away from Rahu dhosam.

- Advertisement -