ஆடி வெள்ளி கிழமைகளில் திருமாங்கல்யத்திற்கு வைக்கும் இந்த 1 பொருள் கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் இவ்வளவு பலன்களா?

kunguma-archanai1
- Advertisement -

பொதுவாக ஆடி வெள்ளி என்பது அம்பாளுக்கு வழிபாடு செய்யக்கூடிய முக்கிய தினமாக கருதப்பட்டு வருகிறது. இந்நாளில் அம்பாள் கோவில்களில் விசேஷமான பூஜைகளும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். அதே போல நாம் நம்முடைய வீட்டிலும் திருமாங்கல்யத்திற்கு வைக்கும் இந்த 1 பொருளை கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்து அவரின் திருநாமாவளிகளை உச்சரித்து வழிபட்டு வந்தால் கிடைக்கக்கூடிய பலன்களை தான் என்னென்ன? என்று இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

mangalyam

கணவனின் தீர்க்காயுள் நிலைக்க மனைவியாக இருப்பவள் தன்னுடைய திருமாங்கல்யத்திற்கு தினமும் குங்குமம் வைத்து வர வேண்டும் என்பது நியதி. இப்போது இவற்றை யாரும் தினமும் எல்லாம் கடைபிடிப்பது கிடையாது. ஆனால் முன்னொரு காலத்தில் தொடர்ந்து ஒரு நாள் விடாமல் மனைவி கணவனுக்காக தன் திருமங்கலத்தில் குங்குமத்தை இட்டுக் கொள்வாள். இதனால் கணவருடைய பரிபூரண அன்பு மனைவிக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவருடைய நீண்ட ஆயுளுக்கு அது ஒரு பாலமாக அமையும் என்று தீர்க்கமாக நம்பினார்கள். அத்தகைய சிறப்புகள் கொண்ட குங்குமம் கொண்டு அம்பாளுக்கு அர்ச்சனை செய்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் அபரிமிதமானவை. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

குங்குமம் என்னும் மகிமை மிகுந்த இந்த பொருள் கர்ப்பப்பை தோஷங்களை நீக்க வல்லது ஆகும். பொதுவாக அனைத்து அம்மன் கோவில்களிலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி ஆகிய இந்த மூன்று தினங்களில் விசேஷமாக குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். அதே போல நம் வீட்டிலும் இந்த நாட்களில் எல்லாம் அம்மன் திரு உருவ சிலை அல்லது படத்திற்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் இதை செய்து வர இன்னும் விசேஷமான பலன்கள் நமக்கு கிடைக்கும்.

Mazaa during pregnancy

கருத்தரிப்பதில் பிரச்சனைகள் இருப்பவர்கள் அல்லது கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்கள், மாதவிடாய் கோளாறுகள், வயிற்று வலி, கருக்குழாய் அடைப்பு என்று கருப்பை சார்ந்த அத்தனை பிரச்சனைகளும் தீர ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு குங்குமம் கொண்டு 108 முறை அல்லது ஆயிரத்து எட்டு முறை அவரின் நாமாவளிகள் உச்சரித்து அர்ச்சனை செய்யலாம். உங்களால் கோவிலுக்கு சென்று அதில் கலந்து கொள்ள முடியும் என்றால் அம்பாளுக்கு குங்குமம் உங்கள் கைகளால் வாங்கிக் கொடுத்து குங்கும அர்ச்சனை செய்வதை அங்கேயே அமர்ந்து கண்குளிர தரிசனம் செய்யலாம்.

- Advertisement -

அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வதை தரிசனம் செய்பவர்களுக்கு கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். அடிக்கடி குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் இருப்பவர்கள் இந்நாட்களில் அம்பாள் கோவிலுக்கு சென்று குங்கும அர்ச்சனையில் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டிலேயே உங்கள் கைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். அர்ச்சனை செய்து வந்த அந்த குங்குமத்தை தினமும் உங்களுடைய திருமாங்கல்யத்தில் மற்றும் நெற்றியிலும் இட்டுக் கொண்டால் கணவனுடைய ஆயுள் நீளும்.

kunguma-archanai

குடும்பத்தில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் வராது, விட்டுக் கொடுத்து நடந்து கொள்வார்கள். மன இறுக்கம், மன உளைச்சல் போன்ற நவீன நோய்களுக்கு மருந்தாகவும் இந்த அர்ச்சனை உங்களுக்கு செயல்படும். எனவே ஆடி வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு அதன் பலன்களை நீங்களும் முழுமையாக பெற்றுக் கொள்ளலாமே!

- Advertisement -