- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவெற்றி தரும் அருகம்புல் வழிபாடு

வெற்றி தரும் அருகம்புல் வழிபாடு

- Advertisement -

வேலை செய்யும் இடமாக இருந்தாலும் சரி, வியாபாரம் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, பெரிய அளவில் தொழில் நடத்தக்கூடிய நிறுவனங்களாக இருந்தாலும் சரி, எல்லா இடத்திலும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அடுத்தவன் நம்மை எப்போது கவிழ்க்கலாம் என்று காத்துக் கொண்டுதான் இருப்பான்.

நம்மை நோகடித்து, நம்மை பலவீனப்படுத்தி, நம்மை வீழ்த்தி, நம்முடைய எதிரி முன்னுக்கு வர வேண்டும் என்று தான் நினைப்பான். மனதளவில் ஒருவனை விழ்த்தி விட்டால் போதும். அவன் செய்யக்கூடிய வேலை செய்யக்கூடிய வியாபாரம் எல்லாமே படுத்துவிடும். மொத்தத்தில் நம்முடைய மனசு தான் நம்முடைய வெற்றிக்கு தோல்விக்கு காரணமாக இருக்கிறது.

- Advertisement -

வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உங்களுடைய மனதை எப்போதும் தைரியமாக வைத்துக் கொள்ளுங்கள். மனதில் என்ன நினைத்துக் கொண்டே இருக்கிறீர்களோ, அதுதான் நடக்கும். ஆகவே நல்லதை நினையுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்.

வாழ்க்கையில் வெற்றி பெற வழிபாடு

என்னதான் சொன்னாலும் இந்த பிரச்சனையில் இருந்தெல்லாம் விடுபட்டு வாழ்க்கையில் முன்னேறி ஒரு நல்ல பதவியில், உயர்ந்த இடத்தில் அமருவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இதற்கு கூடுதல் உழைப்போடு சேர்த்து ஒரு சில ஆன்மீக பரிகாரங்களையும் நாம் செய்ய வேண்டும். அந்த வகையில் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருள். பசும்பாலால் செய்யப்பட்ட ஒரு பிரசாதம், அல்லது பாக்கெட் பாலில் செய்யப்பட்ட ஒரு பிரசாதம், பால் பாயாசம், இனிப்பு பால் பொங்கல். எதுவுமே இல்லை என்றால் பாலை நன்றாக காய்ச்சி அதில் கொஞ்சம் ஏலக்காய் நாட்டு சர்க்கரை போட்டு கலந்து பிள்ளையாருக்கு நெய்வேத்தியம் வச்சிருங்க. அருகம்புல் எடுத்துக் கொள்ளவும்.

பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகருக்கு வாசனை நிறைந்த பூக்களை போட்டுவிட்டு ஒரு அருகம்புள்ளையும் விநாயகருக்கு வைத்துவிட்டு, கொஞ்சம் அருகம்புல்லை உங்களுடைய உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை 27 முறை குறைந்த பட்சம் சொல்ல வேண்டும். நேரம் இருந்தால் 108 முறை சொல்லலாம் தவறு கிடையாது.

- Advertisement -

வெற்றியைத் தரும் மந்திரம்

ஓம் சுபயோக ஐம் கிலீம் க்ரீம் கம் கணபதயே
பாச சுமூக வசியும் பட் ஸ்வாஹா!

இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு அந்த அருகம்புல்லை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள். வேலைக்கு செல்லும்போது இந்த அருகம்புல்லை உங்கள் கையோடு எடுத்துச் சென்றால், உங்களை வீழ்த்த யாராலும் முடியாது. எதிரி தொல்லை இருக்காது. நீங்கள் விரும்பி தேவை என்ற பதவியில் அமர்வதற்கு உண்டான வழிகள் எல்லாம் கிடைக்கும். இந்த அருகம்புல் காய்ந்தாலும் பரவாயில்லை இதை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பான பலனைத் தரும். முடியாதவர்கள் ஞாயிற்றுக்கிழமை எந்த நேரம் உங்களுக்கு உகந்ததோ அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை 5:00 மணியில் இருந்து 6:00 மணி வரைக்கும் மட்டும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: குடும்ப பாதுகாப்பிற்கு அம்மன் வழிபாடு

நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி இந்த வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்