துன்பங்களை போக்கும் அம்மன் துதி

amman-1
- Advertisement -

எந்த ஒரு மனிதனுக்கும் அவனது சொந்த குடும்பம் தான் பலம். அக்குடும்பத்தில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு சென்றால் மட்டுமே அனைவருக்கும் நன்மையை தரும். ஆனால் ஒரு சில குடும்பங்களில் பல்வேறு காரணங்களுக்காக பெற்றோர்கள், பிள்ளைகள், சகோதர சகோதரிகள், கணவன் மனைவி என அனைவரும் சண்டையிட்டு நிம்மதியிழக்கின்றனர். சிலர் பிரிந்து சென்று வாழ்கின்றனர். இது போன்ற குடம்பப்பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்து மன நிம்மதியோடு வாழ கூர வேண்டிய சக்தியாகிய பார்வதியே பல்வேறு அம்மன் பெயர்களில் வழிபடப்படுகிறாள். மேற்கூறிய பிரச்சனைகள் தீர அந்த அம்மனை வேண்டி பாட வேண்டிய துதி இது.

amman

அம்மன் துதி

அழகிய மதுரையில் மீனாட்சி
அகிலம்போற்றும் அன்னை அரசாட்சி
நான்மாடக் கூடலிலே அருளாட்சி
தேன்மொழி தேவியின் தேனாட்சி

- Advertisement -

சங்கம் முழங்கிடும் நகரிலே
சங்கரி மீனாளின் கருணையிலே
மீன்கொடி பறக்கும் மதுரையிலே
வான்புகழ் கொண்டாள் தாயவளே

அன்பர்கள் மனமெல்லாம் நிறைந்திருப்பாள்
ஆதிசிவன் அருகில் அமர்ந்திருப்பாள்
வைரமணி மகுடம் அணிந்திருப்பாள்
கருணையுடன் நம்மை காத்து நிற்பாள்

- Advertisement -

முத்து பவளம் மரகத மாணிக்கம்
பொன் ஆபரணம் பூண்டாள்
சக்தி மனோகரி சந்தர கலாதரி
தென் மதுராபுரி ஆண்டாள்
சித்திரை மாதம் தேவி மீனாட்சி
சொக்க நாதரை மணந்தாள்
பக்தர்கள் மனமும் பரவசம் பொங்கிட
அற்புத லீலைகள் புரிந்தாள்

மலைமகளான பார்வதி தேவியை போற்றி இயற்றப்பட்ட துதி இது. இந்த பாடலை அனைத்து நாட்களிலும் பாடி வழிபடலாம் என்றாலும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்தவுடன், அருகிலிருக்கும் ஏதேனும் அம்மன் கோவிலுக்கு சென்று இந்த திதியை பாடி வழிபட வேண்டும். இதனால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் ஏற்பட்டிருக்கும் கருத்துவேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் நீங்கும். அதிலும் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட அனைத்து விதமான பிரச்சனைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகளும் ஒன்று சேருவார்கள்.

- Advertisement -

Meenatchi amman

“உலகநாதனாகிய” சிவபெருமானின் பத்தினியாகிய பார்வதி தேவி காஞ்சியில் காமாட்சியாகவும், மதுரையில் மீனாட்சியாகவும், காசியில் விசாலாட்சியாகவும் வீற்றிருக்கிறாள். வழிபடும் பக்தர்கள் அனைவரையும் தாய் போல அன்பு செலுத்தி அவர்களை பாதுகாப்பதால் அம்மன் என அழைக்கப்படுகிறாள். தங்களின் எப்படிப்பட்ட குறைகளையும் போக்குமாறு அம்மனிடம் மனமுருகி வேண்டுகின்றனர் பக்தர்கள். ஒரு சமுதாயத்திற்கு அடிப்படையை ஒவ்வொரு மனிதனுக்கென்று இருக்கும் குடும்பம் தான். அதிலுள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக இருந்தால் அனைவருக்குமே நன்மை. இம்மந்திரத்தை கொண்டு அம்மனை வழிபட வேண்டிய பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
விரும்பியதை நிறைவேற்றி தரும் திருவிளக்கு போற்றி

இது போன்ற மேலும் பல மந்திரங்கள், துதி என பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Amman thuthi in Tamil. It is also called as Amman thuthi padal Tamil. Amman thuthi lyrics in Tamil.

- Advertisement -