- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅம்மனை வரவேற்கும் ஆடி தீபம்

அம்மனை வரவேற்கும் ஆடி தீபம்

- Advertisement -

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் நம்முடைய வாழ்க்கையில் நமக்கு வரக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய மாதமாகவும் திகழ்கிறது. அதனால் தான் ஒவ்வொரு ஆடி மாதத்திலும் பலரும் தங்களுடைய இல்லத்தில் கூழ் காய்ச்சல் ஊற்றுவதையும் வேப்பிலை மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள். இது அனைத்துமே ஆன்மீக ரீதியாக எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோல்தான் ஆரோக்கிய ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தில் நிலை வாசலில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அம்மனை வரவேற்கும் ஆடி தீபம்

நம்முடைய வீட்டிற்குள் யார் உள்ளே வருவதாக இருந்தாலும் நிலைவாசல் வழியாகத்தான் வரவேண்டும். நிலை வாசல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. நிலை வாசலில் தான் குலதெய்வமும், கிரக லட்சுமியும் வீற்றிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதனால் தான் புதிதாக கட்டக்கூடிய இல்லங்களுக்கு நிலை வாசல் வைப்பது என்பது மிகவும் விசேஷமான ஒரு பூஜையாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட நிலை வாசலில் அனுதினமும் தீபம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. அனுதினமும் ஏற்ற இயலாதவர்கள் கூட சில குறிப்பிட்ட மாதங்களிலும் நாட்களிலும் தீபத்தை ஏற்றும்பொழுது அந்த தீபத்தின் பலனால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.

- Advertisement -

அந்த வகையில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுவதால் இயன்றவர்கள் ஆடி மாதம் முழுவதும் நிலை வாசலில் தீபம் ஏற்றலாம். அப்படி ஆடி மாதம் முழுவதும் தீபம் ஏற்ற இயலாது என்று நினைப்பவர்கள் ஆடி ஒன்று, பதினெட்டு, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் போன்ற சிறப்பு வாய்ந்த நாட்களில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்யலாம். அந்த வகையில் இன்று ஆடி ஒன்று காலையிலும் இந்த தீபத்தை நல்ல நேரம் பார்த்து ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு. காலையில் நல்ல நேரம் பார்த்து ஏற்றி இயலவில்லை என்பவர்கள் மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம்.

வீட்டு நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். குங்குமம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பிறகு நிலை வாசலில் இரண்டு புறங்களிலும் தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு புறத்தில் மட்டும் தீபம் ஏற்றுவதாக இருந்தால் வலது புறத்தை தேர்வு செய்து கொள்ளலாம். நிலை வாசலுக்கு முன்பாக தரையில் மஞ்சளை தடவிக் கொள்ளுங்கள். அந்த மஞ்சளில் தாமரை பூவை பச்சரிசி மாவினால் வரைந்து கொள்ளுங்கள். அந்த தாமரை பூவிற்கு மேலாக நான்கைந்து வேப்பிலை கொத்தை வைத்து அதற்கு மேல் சிறிது அட்சதையை போட வேண்டும்.

- Advertisement -

அந்த அட்சதைக்கு மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் நிறத்தில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்திற்கு ஏதாவது ஒரு பூவையும் சமர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு “அஷ்டலட்சுமியே வருக ஐஸ்வரியம் தருக” என்று முழுமனதோடு வேண்டிக்கொண்டு இந்த தீபத்திற்கும் நிலை வாசலுக்கு ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும்.

இந்த முறையில் நாம் நிலை வாசலில் இன்றைய தினம் தீபமேற்றி வழிபாடு செய்ய அம்மன் மட்டுமல்லாமல் அஷ்டலட்சுமிகளும் நம் வீடு தேடி வருவார்கள். இந்த வேப்பிலையை நாளை வெள்ளிக்கிழமை சுத்தம் செய்யக் கூடாது என்பதால் நாளையும் இதையே வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு சனிக்கிழமை சுத்தம் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: ஆடி முதல் நாள் அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை

நிலைவாசல் தீபம் என்பது அனைத்து தெய்வங்களையும் வீட்டிற்குள் அழைப்பதற்குரிய தீபமாகவே கருதப்படுகிறது. முழுமனதோடு ஆடி மாதத்தில் அம்மனையும் லட்சுமி தேவியையும் நினைத்து தீபம் ஏற்றுபவர்களுக்கு அவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்