ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அம்மன் வழிபாட்டை செய்யக்கூடிய ஒவ்வொரு நபர்களும் ஆடி மாதத்தை தவிர விடமாட்டார்கள். அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஞாயிறு, செவ்வாய், வெள்ளி போன்ற பல கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாட்டிற்குரிய நாட்களாகவே கருதப்படுகின்றன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதத்தில் நாம் அனைவரும் எப்படி அம்மனை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்கிறோமோ அதே போல் அம்மனை நம்முடைய வீட்டிற்கும் அழைக்க வேண்டும். அம்மனை வீட்டிற்கு எந்த முறையில் அழைத்தால் வருவாள் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அம்மனை வீட்டிற்கு அழைக்கும் முறை
நம்முடைய வீட்டில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டின் பலனை நாம் முழுமையாக பெற வேண்டும் என்றால் எந்த தெய்வத்தை வழிபாடு செய்கிறோமோ அந்த தெய்வத்தின் அருள் நமக்கு வேண்டும். அந்த தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் அந்த தெய்வம் நாம் இருக்கும் இடத்திற்கு வர வேண்டும். அந்த வகையில் தான் ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதம் என்பதால் அம்மனை நினைத்து நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு பூர்த்தி அடைவதற்கு ஆடி முதல் நாளே அம்மனை வீட்டிற்கு நாம் அழைக்க வேண்டும்.
இந்த வழிபாட்டை ஆடி மாதம் முதல் நாள் ஜூலை மாதம் 17ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலையில் 7:40 மணியிலிருந்து 9 10 மணிக்குள் செய்யலாம் அல்லது 10:45 மணியிலிருந்து 11:45 மணி வரை செய்யலாம் அல்லது மாலை 6:30 மணியிலிருந்து 9:30 மணிக்குள் செய்யலாம். இதற்கு ஒரு சொம்பு வேண்டும். இந்த சொம்பை சுத்தம் செய்து மூன்று இடங்களில் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இந்த சொம்பின் கழுத்து பகுதியின் வாசனை மிகுந்த மலர்களை வைக்க வேண்டும்.
இந்த சொம்பிக்குள் ஒரு ஒரு ரூபாய் நாணயம், ஒரு எலுமிச்சம் பழம், சிறிது பச்சை கற்பூரம், இரண்டு ஏலக்காய் போட்டு அந்த சொம்பு நிறையும் வரை தண்ணீரை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த சொம்பை வீட்டு பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி அதற்கு மேல் வைக்க வேண்டும். இந்த சொம்புக்கு முன்பாக ஐந்து அகல் விளக்குகளில் நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் ஏதேனும் இனிப்பு வகைகளை வைக்கலாம்.
இவ்வாறு இவை அனைத்தையும் தயார் செய்து முடித்த பிறகு முதலில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். விநாயகப் பெருமானை வழிபாடு செய்த பிறகு நாம் எந்த அம்மனை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்று நினைக்கின்றோமோ அந்த அம்மனின் பெயரை 108 முறை கூற வேண்டும். ஓம் சக்தி என்று கூறி அந்த அம்மனின் பெயரைக் கூறி கடைசியில் போற்றி என்று கூற வேண்டும். அதாவது மாரியம்மனை வீட்டிற்கு அழைக்கிறோம் என்றால் “ஓம் சக்தி மாரியம்மனே போற்றி” என்று கூறவேண்டும். இப்படி 108 முறை கூறி வாசனை மிகுந்த மலர்களால் அந்த சொம்பிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். தூபம் காட்டும் பொழுது கண்டிப்பாக முறையில் நிலை வாசலுக்கு காட்ட வேண்டும்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பிரசாதங்களை வீட்டில் இருக்கக்கூடிய அனைவருக்கும் கொடுத்து விடலாம். இந்த கலசம் மூன்று நாட்கள் அப்படியே இருக்கட்டும். மூன்றாவது நாள் இந்த கலசத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்தை எடுத்து வீடு முழுவதும் தெளித்து கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அதில் போட்ட எலுமிச்சம் பழத்தை நம்முடைய பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: திறமைக்கேற்ற வேலை கிடைக்க வழிபாடு
நிறை சொம்பை வைத்து மிகவும் எளிமையான முறையில் நமக்கு விருப்பமான அம்மனை நம் வீட்டிற்கு இப்படி மனதார அழைக்க அவள் கண்டிப்பாக நம் வீடு தேடி வந்து நமக்கு அருள் புரிவாள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.