1 கப் அரிசி மாவு இருந்தால் போதும்! குண்டு குண்டா கார அம்மிணிக் கொழுக்கட்டை 10 நிமிடத்தில் இப்படி செய்து அசத்தி விடலாமே!

ammini-kara-kozhukattai-rice
- Advertisement -

தினமும் ஒரே டிபன் வகை செய்து போர் அடித்துவிட்டதா? விதவிதமான டிபன் வகைகள் செய்வது கடினமாக தான் இருக்கும். ஆனால் இது போல் 10 நிமிடத்தில் சட்டென செய்து விடக்கூடிய அசத்தலான டிபன் வகைகள் எப்படி செய்வது? என்று தெரிந்து கொண்டால் காலை நேர உணவை அழகாகவும், ஆரோக்கியமாகவும் ஆக்கிவிடலாம்! இந்த வகையில் கொழுக்கட்டை போலவே செய்யும், இந்த குண்டு குண்டு அம்மிணி கார கொழுக்கட்டைகள் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த கொழுக்கட்டைக்கு சைடிஷ் கூட தேவையில்லை, அப்படியே சாப்பிடலாம். அம்மிணி கொழுக்கட்டை செய்வது எப்படி? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

rice-flour

‘அம்மிணி கொழுக்கட்டை’ செய்ய தேவையான பொருட்கள்:
இடியாப்ப மாவு – 1/2kg, உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – 400ml, சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 3, கறிவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், துருவிய தேங்காய் – கால் கப், இட்லி மிளகாய் பொடி – 2 டேபிள் ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

‘அம்மிணி கொழுக்கட்டை’ செய்முறை விளக்கம்:
முதலில் அரை கிலோ அளவிற்கு இடியாப்ப மாவு எடுத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டுடன் இடியாப்ப மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து நன்கு கெட்டியான பதத்திற்கு பிசையவும். வெதுவெதுப்பான தண்ணீருடன் இடியாப்ப மாவு சேரும் பொழுது மாவு நன்கு திரண்டு கொழுக்கட்டை செய்வது போல வரும்.

ammini-kozhukattai

இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக கைகளில் உருட்டிக் கொள்ள வேண்டும். மாவு கையில் ஒட்டாமலிருக்க சிறிதளவு எண்ணெய் தடவி கொள்ளுங்கள். பின்னர் இட்லி குண்டாவில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, மேல்தட்டில் இட்லி துணியை ஈரப்படுத்தி விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து விட வேண்டியது தான். ஏழிலிருந்து பத்து நிமிடத்திற்குள் குண்டு குண்டு கொழுக்கட்டைகள் நன்கு வெந்து வந்திருக்கும். பின்னர் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடி கனமான வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரிய விடுங்கள்.

- Advertisement -

கடுகு நன்கு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்நிறமாக தாளிக்க வேண்டும். பின்னர் வரமிளகாய்களைக் கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து லேசாக வதக்கவும். பின்னர் பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆற வைத்துள்ள குட்டி குட்டி குண்டான அம்மிணி உருண்டைகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுங்கள். பிறகு பூப்போல துருவிய தேங்காய் சேர்த்து நன்கு பிரட்ட வேண்டும். காரத்திற்கு இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள வைக்கும் இட்லி மிளகாய் பொடியை இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தூவி அதன் பச்சை வாசனை போக நன்கு பிரட்டி எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளலாம்.

ammini-kara-kozhukattai

பின்னர் தாளித்த பொருட்களுடன் அம்மிணி உருண்டைகள் நன்கு கலந்ததும் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி ஒரு பிரட்டி பிரட்டி இறக்க வேண்டியது தான். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சுலபமாக பத்தே நிமிடத்தில் கொழுக்கட்டை அவித்து எடுப்பது போல எடுத்து, சட்டென தாளித்து பிரட்டி ஒரு அற்புதமான காலை நேர உணவை ஆரோக்கியமான முறையில் தயாரித்து விடலாம். நீங்களும் ஒருமுறை வீட்டில் இதே போல முயற்சி செய்து பார்த்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -