உங்கள் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் மறைந்து, மகிழ்ச்சி மட்டும் நிலைத்திருக்க இந்த ஒரு பொருளை வைத்து விநாயகருக்கு தீபம் ஏற்றி பாருங்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நினைவாகும்

vinayagar
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தனக்கான வேண்டுதலை இறைவனிடம் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறான். கோவிலுக்கு செல்லாத மனிதர்கள் இருந்தாலும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் மனிதர்கள் இல்லாமல் இருப்பதில்லை. தங்களுக்கு வேண்டியதை எவரிடம் கேட்க முடியும், இறைவனிடம் தானே அதனை முறையிட முடியும். அப்படி நாம் வெளியில் செல்ல முடியாத காரியங்கள் அனைத்தையும் இறைவனிடம் மட்டுமே கூறி இருக்கிறோம். எனவே இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே நமக்கு இருக்கும் அனைத்து விதமான துன்பங்களில் இருந்தும் விடுபட முடியும். எனவே தான் பலவிதமான பூஜைகள், யாகங்கள் செய்து ஒவ்வொருவரும் தங்களுக்கான வேண்டுதலை இறைவனின் முன் வைக்கின்றனர். நிச்சயம் இறைவன் நமது வேண்டுதலுக்கான பலனைக் கொடுப்பார் என்பது அனைவரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். அவ்வாறு முதற்கடவுளான விநாயகரை இந்த தீபம் ஏற்றி வணங்கி வர நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நடைபெறும். வாருங்கள் அது என்ன தீபம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்

வீட்டில் எந்த ஒரு விசேஷம் துவங்குவதாக இருந்தாலும், பூஜைகள் மற்றும் யாகங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் விநாயகருக்கு பூஜை செய்வது தான் அனைவரின் வழக்கமாகும். விநாயகரின் தந்தையான சிவபெருமானும் முதலில் விநாயகரை வணங்கிய பின்னர் தான் தன்னுடைய காரியங்களைத் துவங்குவார். இப்படிப்பட்ட சிறப்பு பெருமை விநாயகருக்கு மட்டுமே இருக்கிறது.

- Advertisement -

விநாயகர் ஒருவரே அனைவருக்கும் பிடித்தமான ஒரு தெய்வமாவார். விநாயகப் பெருமானை வணங்காதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். பலரின் இஷ்ட தெய்வமாக இருப்பவர் விநாயகர் ஆவார் விநாயகருக்கு ஒரு தீபம் ஏற்றி அவரை நினைத்தாலே போதும். உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுத்து விடுவார்.

அதேபோல் உங்கள் மனதில் தீராத துயரம் இருந்தாலும் அல்லது நீங்கள் நினைக்கின்ற காரியம் வெற்றியாக நடைபெற வேண்டும் என்றாலும் ஏழு நாட்கள் இந்த தீபத்தை மட்டும் ஏற்றி வணங்கினால் போதும். நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் அந்த விஷயம் தானாக நடைபெற்று விடும். அவ்வாறு நீங்கள் எந்த கிழமையில் தொடங்குகிறீர்களோ அந்த நாளிலிருந்து மறுவாரம் அந்த நாள் வரும் வரையில் இந்த விபத்தை தொடர்ந்து ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அதாவது திங்கட்கிழமை இந்த பூஜையை துவங்கினால் மறுவாரம் திங்கட்கிழமை முதல் இந்த தீபத்தை தினமும் ஏற்ற வேண்டும். மூன்று வேளையில் ஒரு வேளை மட்டும் உணவு உண்ணாமல் உபவாசம் இருந்து, மனதார விநாயகரை நினைத்து கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்துடன் நாம் சேர்க்க வேண்டிய முக்கிய பொருள் வெட்டிவேர்.

இயல்பாகவே வெட்டிவேருக்கு ஈர்ப்பு தன்மை அதிகமாக இருக்கிறது. முந்தைய காலத்தில் எல்லாம் பலவித பூஜைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் இந்த வெட்டிவேர் பயன்படுத்தப்பட்டது. அதிலும் இந்த வெட்டிவேருக்கு சிறப்பு வாய்ந்த மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இந்த வெட்டிவேரை நாம் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் திரியுடன் சேர்த்து நன்றாக முறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி, திரிபோட்டு, தீபமேற்றி வினாயகரை முழுமனதுடன் வேண்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த பூஜையை சிறப்புடன் செய்துவர நீங்கள் வேண்டிய வரம் நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -