இன்று தைத்திருநாள். அனைவரது வீட்டிலும் தை பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து மகிழ்ச்சியோடு குடும்பத்துடன் இந்த பொங்கல் தினத்தை கொண்டாடி கொண்டிருக்கின்றோம். இந்த இனிய நாளில் நமக்கெல்லாம் பயனுள்ளபடி அமையக்கூடிய ஒரு எளிமையான மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
இப்படி ஒரு மந்திரத்தை இதற்கு முன்பு நாம் வேறு எந்த இடத்திலும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லும் வகையில், இந்த இனிய நாளில் அந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம். வாய்ப்பு கிடைத்தால் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இன்று இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
12 மணிக்கு தான் பொங்கல் கும்பிடப் போகிறீர்கள் என்றால் பொங்கலை கும்பிட்டு முடித்த பிறகு குடும்பத்தோடு இந்த மந்திரத்தை சொன்னாலும் தவறு கிடையாது. குடும்பத்தோடு அமர்ந்து இந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதமும் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும். குடும்பத்தில் நிறைய நல்லது நடக்கும்.
அனைத்து தெய்வங்களுக்கும் உண்டான மந்திரம்
ஓரெழுத்து மந்திரத்தை “ஓம்” என்று சொல்லுவோம்
இரண்டெழுத்து மந்திரத்தை “ராமா” என்று சொல்லுவோம்
மூன்றெழுத்து மந்திரத்தை “முருகா” என்று சொல்லுவோம்.
நான்கெழுத்து மந்திரத்தை “நாராயணா” என்று சொல்லுவோம்.
ஐந்து எழுத்து மந்திரத்தை “நமச்சிவாயா” என்று சொல்லுவோம்.
ஆறு எழுத்து மந்திரத்தை “சரவணபவ” என்று சொல்லுவோம்.
ஏழெழுத்து மந்திரத்தை “முத்தீஸ்வரர்” என்று சொல்லுவோம்.
எட்டெழுத்து மந்திரத்தை “ஓம் ஸ்ரீ குருவாயூர் அப்பா” என்று சொல்லுவோம்.
ஒன்பது எழுத்து மந்திரத்தை “ஓம் பராசக்தி அம்மா” என்று சொல்லுவோம்
பத்து எழுத்து மந்திரத்தை “திருச்சிற்றம்பலம்” என்று சொல்லுவோம்.
இன்று மட்டும் இந்த மந்திரத்தை உச்சரித்துவிட்டு அப்படியே விட்டு விடக்கூடாது. இந்த மந்திரத்திற்கு பின்னால் பத்து தெய்வங்களின் சக்தி மறைந்து இருக்கிறது. தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு இந்த மந்திரத்தை சொல்ல துவங்கி பாருங்கள். வாழ்வில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் தானாக விளக்கும். சந்தோஷம் உங்களை வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் பரிபூரண கடாட்சத்தை பெற
இந்த தைத்திருநாளில் உங்களை பிடித்த கஷ்டங்கள் எல்லாம் விலகி, தை பிறந்ததும், முயற்சிகளுக்கு உண்டான வழியையும் காட்டித் தரக்கூடிய சக்தி இந்த பத்து வரி மந்திரத்திற்குள் அடக்கம். அனைவருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். தெரிவித்துக் கொண்டு இந்த மந்திரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.