- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா இதுக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இந்த ஆந்திரா ஸ்பெஷல்...

பிரியாணி, சப்பாத்தி, பரோட்டா இதுக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இந்த ஆந்திரா ஸ்பெஷல் கத்திரிக்காய் மசாலாவை செஞ்சு பாருங்க. கத்திரிக்காய் அலர்ஜின்னு சொல்றவங்க கூட அசால்ட்டா சாப்பிடுவாங்க

- Advertisement -

கத்தரிக்காய் உடலுக்கு நல்லது என்றாலும் கூட பெரும்பாலானோருக்கு கத்திரிக்காய் என்றால் பிடிப்பதில்லை. அதை எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டார்கள். அப்படியானவர்கள் கூட சாப்பிடும் வகையில் ஒரு சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் மசாலா எப்படி செய்வது என்பதை தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

முதலில் இதற்கு தேவையான மசாலாக்களை வறுத்து அரைத்துக் கொள்வோம். அதற்கு 1/4 கப் வேர்க்கடலை, 4 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள், 4 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய், 2 டேபிள் ஸ்பூன் தனியா, 1துண்டு பட்டை, 2 ஏலக்காய், 5 இலவங்கம், 1/4 டீஸ்பூன் வெந்தயம், 10 காய்ந்த மிளகாய் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்பொழுது அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் வேர்க்கடலை, எள், தேங்காய், தனியா, இவைகளை தனித் தனியாக வாசம் வரும் வரை அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக மசாலா பொருட்களை சேர்த்து அதையும் ஒரு முறை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது வறுத்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் சேர்த்து 1/4 மஞ்சள் தூள்,1/2 உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பைன் பேஸ்ட் ஆக அரைத்து விடுங்கள். அடுத்ததாக அரை கிலோ கத்திரிக்காய் முழுவதுமாக அரிந்து விடாமல் நான்கு புறமும் லேசாக கோடு போட்ட பிறகு அரைத்து வைத்த மசாலாவை உள்ளே வைத்து விடுங்கள். மீதி இருக்கும் மசாலா அப்படியே இருக்கட்டும் இதை நாம் கிரேவியில் சேர்க்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக அடுப்பில் பேன் வைத்து 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/4 டீஸ்பூன் கடுகு, 1/4 டீஸ்பூன் சீரகம், 1 கொத்து கருவேப்பிலை, மூன்று பச்சை மிளகாய் கீறி சேர்த்த பிறகு 1பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்து லேசாக வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கிய பிறகு 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் மிளகாய்த்தூள் இவையெல்லாம் சேர்த்து ஒரு முறை வதக்கிய பிறகு 1/4 கப் கெட்டியான புளித்த தயிரை சேர்த்து ஒரு முறை கலந்த பிறகு, ஏற்கனவே நாம் மசாலா சேர்த்து வைத்த கத்திரிக்காய் இதில் சேர்த்து மூடி போட்டு பத்து நிமிடம் அப்படியே வேக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து அந்த மசாலாவில் கத்திரிக்காய் நன்றாக வெந்து இருக்கும். அதன் பிறகு மீதி எடுத்து வைத்திருக்கும் மசாலாவை இதில் சேர்த்து கொஞ்சமாக புளி தண்ணீர் ஊற்றி ஒரு முறை லேசாக கத்திரிக்காய் உடையாமல் கலந்து விட்டு மூடி போட்டு மேலும் ஒரு ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டால் மசாலவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்திருக்கும். இப்போது கடைசியாக கொத்துமல்லி தழைகளை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: ராஸ்தானி மசாலா சப்பாத்தி செய்முறை

இந்த கிரேவி சாதத்திற்கும் வைத்த சாப்பிடலாம். பூரி, பரோட்டா, சப்பாத்தி போன்றவற்றிக்கு இது பிரமாதமாக இருக்கும். பிரியாணியுடன் வைத்து சாப்பிட்டால் இதன் சுவையைப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த கத்திரிக்காய் மசாலாவை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க

சற்று முன்