- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சைடிஷ் எதுவும் செய்ய முடியவில்லையா? இதோ டக்குனு இந்த ராஜஸ்தானி மசாலா சப்பாத்தி செஞ்சுடுங்க. தொட்டுக்கொள்ள...

சைடிஷ் எதுவும் செய்ய முடியவில்லையா? இதோ டக்குனு இந்த ராஜஸ்தானி மசாலா சப்பாத்தி செஞ்சுடுங்க. தொட்டுக்கொள்ள வெறும் தயிர் இருந்தால் போதும். 10 சப்பாத்தி கூட ருசுச்சு சாப்பிடலாம்.

- Advertisement -

ராஜஸ்தானி ஸ்டைலில் ஒரு மசாலா சப்பாத்தி ரெசிபியை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த மசாலா சப்பாத்தி செய்வது மிக மிக சுலபம். அதே சமயம் இதற்கு தொட்டுக் கொள்ள சைடு டிஷ் தேட வேண்டாம். கொஞ்சமாக தயிர் இருந்தால் போதும். அப்படி இல்லை என்றால், ஆனியன் ரைத்தா இருந்தால் கூட இந்த சப்பாத்தியை சுட சுட சாப்பிட்டு விடலாம். பத்து சப்பாத்தி சாப்பிட்டால் கூட திகட்டவே திகட்டாது. அவ்வளவு அருமையான எளிமையான ரெசிபியை தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள், பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம். இதை லஞ்ச் பாக்ஸ்க்கு கூட கட்டிக் கொடுக்கலாம் அருமையாக இருக்கும்.

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் 1 கப் கோதுமை மாவு போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவை ரொம்பவும் கட்டியாக பிசைந்து விடக்கூடாது. ரொம்பவும் தண்ணீர் ஊற்றியும் பிசைந்து விடக்கூடாது. இறுதியாக பிசைந்த மாவின் மேல் 1 ஸ்பூன் எண்ணெய் தடவி ஒரு மூடி போட்டு 1/2 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஊறிய மாவை மீண்டும் உங்கள் கையை கொண்டு பிசைந்து, சின்ன சின்ன உருண்டைகளாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி எந்த சைஸ் வேணுமோ, அந்த சைஸுக்கு உருண்டைகள் தயார் செய்ய வேண்டும். அந்த உருண்டைகளை சப்பாத்தி பலகயின் மீது வைத்து, லேசாக மாவு தூவி, திரட்டி கொள்ள வேண்டும். இப்போது இதற்குள்ளே ஸ்பெஷல் மசாலா தடவலாம் வாங்க.

வட்டமாக தேய்த்து வைத்திருக்கும் சப்பாத்தியின் மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு, மிளகாய் தூள் – 2 சிட்டிகை, சீரக தூள் – 2 சிட்டிகை, ஆம்சூர் தூள் – 2 சிட்டிகை, கரம் மசாலா – 2 சிட்டிகை, ஓமம் – 2 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, போட்டு இந்த மசாலாவை நெயில் கலந்து, சப்பாத்தி முழுவதும் தடவி விட்டு, சப்பாத்தியை நான்காக மடித்து தேய்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சப்பாத்தியின் ஒரு முனையை மட்டும் வெட்டிவிட்டு, அப்படியே 4 புறமும், மடித்து தேய்த்தாலும் லேயர் லேயராக சப்பாத்தி கிடைக்கும். மசாலா வெளியே வராதபடி பார்த்து தேய்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பக்குவமாக தேய்த்த இந்த சப்பாத்திக்கு மேலே கொஞ்சம் மல்லி தழையை தூவி தேய்த்து, தோசை கல்லில் போட்டு ஒரு பக்கம் வெந்ததும், மறுபக்கமும் வேகவைத்து தேவைப்பட்டால் இறுதியாக நெய் அல்லது எண்ணெய் தடவி சுடச்சுட பரிமாறி பாருங்கள். அவ்வளவு அருமையாக இருக்கும். இதற்கு தொட்டுக் கொள்ள ஒரு சிறிய கிண்ணத்தில் தயிர் வைத்துக் கொள்ளுங்கள். அந்த தயிருக்கு மேலே கொஞ்சமாக மிளகாய் தூள், சீரகத்துள், உப்பு சிறிதளவு, சர்க்கரை சிறிதளவு, கொத்தமல்லி தழை தூவி, தொட்டு சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மக்காச் சோளம் லட்டு செய்முறை

பெருசு பெருசா ஆளுக்கு 4 சப்பாத்தி சுட்டு கொடுத்தால் கூட போதுங்க. வயிறு நிரம்பி இருக்கும். சில பேர் சப்பாத்தியோட ஆனியன் ரைத்தா வைத்து சாப்பிடுவார்கள். அப்படியும் பரிமாறலாம். சப்பாத்திக்கு உள்ளே வைக்கிற மசாலா பொருட்களை கூடவோ குறைத்தோ உங்கள் ருசிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்கு நெய் பிடிக்காது என்றால், நெய் க்கு பதில் நல்லெண்ணெய் ஊற்றி, அதன் மேலே மசாலா பொடி போட்டு, தடவியும் சப்பாத்தி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த சிம்பிளான சப்பாத்தி ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்