பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் மனைவி மரணம்.! வருத்தத்தில் மூழ்கிய அணி

straus 2

பிரபல இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி வீரருமான ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் அவர்களின் மனைவி இன்று (29/12/18)நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணம் அடைந்தார்.இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும்,இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தங்களுது இறங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

straus

ஸ்டார்ஸின் மனைவி மறைவினையொட்டி உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஸ்டாராஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவினை பூர்விகமாக கொண்ட ரூத் என்பவரை காதல் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆன் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்த ஸ்டராஸ் பல சிகிச்சைகளை தனது மனைவிக்கு ஏற்பாடு செய்தும் புற்றுநோயின் தீவிரம் காரணமாக அவரது இறப்பினை அவரால் தடுக்க இயலவில்லை.

straus 1

இதன் காரணமாக அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். இன்று அவருடைய மனைவி இறந்ததும் அதனை சமூக வலைத்தளம் மூலம் அனைவருக்கும் தெரிவித்தார். இதனால் அவரது நட்பு வட்டாரம் மட்டுமின்றி கிரிக்கெட் தோழர்களும் வருத்தமடைந்தனர். தற்போது மீளா துயரில் இருக்கும் ஸ்டராஸ் அவர்களுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் தங்களது ஆறுதலை அவருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய இந்திய வீரர் படைத்த புதிய சாதனை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்