விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய இந்திய வீரர் படைத்த புதிய சாதனை

india

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியின் நுனியில் உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 399 ரன்கள் என்ற கடினமான இலக்கினை நிர்ணயித்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 141 ரன்கள் பின்னிலையில் உள்ளது.

agarwal

வெற்றியை நோக்கி வலுவான நிலையில் கோலியின் இளம்படை உள்ளது. இந்நிலையில் இந்திய அணியை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரான மாயங்க் அகர்வால் ஒரு அறிய சாதனையை ஹர்திக் பாண்டியாவுடன் பகிர்ந்துள்ளார். அதுயாதெனில் அறிமுக டெஸ்ட் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன அகர்வால் மொத்தம் 3 சிக்ஸர்களை அடித்தார். இதற்கு முன்னர் அறிமுக டெஸ்ட் போட்டியில் ஹர்டிக் பாண்டியா 3 சிக்ஸர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாதனையை அகர்வால் மற்றும் பாண்டியாவோடு பகிர்ந்தார்.

agarwal 3

முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய அகர்வால் வந்த போது ஆஸ்திரேலிய வர்ணனையாளர்கள் அவரின் பேட்டிங் திறனை குறைத்து பேசி விமர்சித்தனர். இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் இரண்டு இன்னிங்சிலும் தனது அபார ஆட்டத்தினை வெளிப்படுத்தி அசத்தினார். தற்போது அவர்களுக்கு புரிந்திருக்கும் அகர்வால் திறமைவாய்ந்த பேட்ஸ்மேன்தான் என்று இந்திய ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

பவுலிங்கில் ஆஸ்திரேலிய வீரர்களை பின்னுக்கு தள்ளி அறிய சாதனை படைத்த இந்திய வீரர் இவரா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்