வீடு கட்ட வேண்டும் என்ற உங்களது ஆசை நிறைவேற வேண்டுமா? அங்காரகனின் இந்த மந்திரத்தை சொல்லி பாருங்கள்.

Angaragan-with-home

எப்படியாவது சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு உண்டு. சிலருக்கு வீடு கட்டுவதற்கு தேவையான நிலம் இருக்கும். பணம் இருக்கும். ஆனால் வீடு கட்டுவதற்கான யோகம் அமையாமல் வாடகை வீட்டிலேயே இருப்பார்கள். சிலருக்கு வசதி வாய்ப்புகள் இருக்காது. ஆனால் தன் மனதில், எப்படியாவது கடன் வாங்கியாவது நமக்கென்று ஒரு வீட்டினை கட்டிவிட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கும். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி. வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணமும், முயற்சியும் உங்கள் மனதில் உள்ளதா? அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

 Angaragan

ஓம் அங்காரகாய நம

பூமிக்கு சொந்தக்காரர் என்றால் அது செவ்வாய் கிரகத்தை குறிக்கிறது. செவ்வாயின் மற்றொரு பெயர் அங்காரகன். செவ்வாய்க் கிழமை தோறும் நவக்கிரகம் உள்ள கோவிலுக்குச் சென்று, நவகிரகங்களில் ஒருவரான செவ்வாயின் முன்பு மேலே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

sevvai

செவ்வாய் பகவானுக்கு உகந்த செவ்வாழைப்பழமும், அரளிப்பூயையும் வைத்து வழிபடுவது மேலும் சிறப்பை தரும். மந்திரத்தை மனதார உச்சரித்து, உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை அந்த செவ்வாய் பகவானிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். மனதார இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீடு கட்டுவதில் இருந்த தடைகள் நீங்கி நிச்சயம் உங்களுக்கான விடிவுகாலம் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே
கணவன் மனைவி பிரச்சனையா? இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Angaragan mantra in Tamil. Angaragan manthiram in Tamil. Sontha veedu vanga. Veedu katta manthiram in Tamil.