கணவன் மனைவி பிரச்சனையா? இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

love-sucess-mantra-Tamil-1-

சில வீடுகளில் கணவன் மனைவி இவர்களுக்கிடையே சதாகாலமும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இதனால் நம் வீட்டிலுள்ள மற்றவர்களுக்கு இடையேயும் ஒற்றுமை இருக்காது. ஒரு வீட்டில் கணவன் மனைவியின் உறவு சுமூகமாக இருந்தால் தான் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தினால் நிம்மதியாக வாழ முடியும். கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனைகள் நீங்கி, ஒற்றுமை பலம் பெற ஒரு எளிய வழிபாடு உள்ளது. மோகினி வித்யா பூஜை என்ற வழிபாடு தான் அது. இந்த பூஜையை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம். உங்களுக்கான மோகினி வித்யா பூஜை மந்திரம் இதோ..

mantra chanting procedure tamil

மோகினி வித்யா பூஜை மந்திரம்

ஓம் மோகினி தேவி வஜ்ரேஸ்வரி காம் மாலினி
மம பிரியந்தம் ஆகர்சய ஆகர்சய சுவாகா

kamatchi vilakku

முதலில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கிழக்குப் பக்கம் பார்த்தபடி அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வெற்றிலையில் சிறிதளவு குங்குமத்தை வைத்து தண்ணீரை தொட்டு மோதிர விரலால், குழைக்கும் போது, மேலே கொடுக்கப்பட்டுள்ள மோகினி வித்யா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அந்த குங்குமத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பூஜையை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்து முடித்துவிட வேண்டும். இதனால் கணவன் மனைவி ஒற்றுமையுடன் சேர்ந்து நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே
காலசர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் நீங்க ‘துவிதநாக பந்தம்’.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Mohini vidya mantra in Tamil. Mohini vidya tantra mantra. Mohini vidya mantra for husband. Mohini Manthiram.