முயற்சிகளை வெற்றிபெற செய்யும் ஆஞ்சநேயர் ஸ்லோகம்

hanuman-1-1

சோம்பிக்கிடக்கும் மனமும் உடலும் தீமைகளின் கூடாரமாகும். மனிதர்கள் அனைவரும் உழைத்தால் மட்டுமே எல்லோரும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். வாழ்க்கைக்கு தேவையான பணத்தை பெறுவதற்கு நாம் அனைவரும் ஏதாவது ஒரு பணி அல்லது தொழில் ஈடுபடுகிறோம். இந்த பணி, தொழிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபட இருப்பவர்கள் அஞ்சனை தேவியின் மைந்தனான ஆஞ்சேநேயரின் இந்த ஸ்லோகத்தை கூறி வழிபடுவது சிறப்பானதாகும்.

hanuman

ஆஞ்சநேயர் ஸ்லோகம்

ஆஞ்சநேய மதி படலநாநம்
காஞ்சனாத்திரி காமனீய விக்ரகம்
பாரிஜாத தாரு மூல வசிநம்
பாவயாமி பவ மன நந்தனம்

வாயு பகவானின் மைந்தனான ஆஞ்சநேயரை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் 27 முறை கூறி வருவது சிறந்தது. சனிக்கிழமைகளில் காலை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதியில், நெய்விளக்கேற்றி, பழம் மற்றும் பூக்களை நிவேதனமாக வைத்து, இந்த ஸ்லோகத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். இதை சனிக்கிழமைகள் தோரும் செய்து வர நீங்கள் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிபெறும். வருமானமும் பெருகும்.

hanuman

வானரர்களின் சிறந்த அரசானனான கேசரியின் மைந்தனானவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். அனைத்து தேவர்களும் அவருக்கு அளித்த வரங்களின் காரணமாக என்றும் இறவாத நிலையான “சிரஞ்சீவி” தன்மையை அடைந்தவர். ஸ்ரீராமனுக்கு பணிவு மிக்க சேவகனாகவும், அரக்கர்களையும் ராட்சதர்களையும் அழிப்பதில் வல்லவர். விடாமுயற்சிக்கும், மன உறுதிக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்ற ஸ்ரீ ஆஞ்சநேயரை இம்மந்திரம் ஜெபித்து நாம் வழிபடுவதால் நாம் வாழ்க்கைக்கு தேவைப்படும் செல்வத்தை ஈட்டுவதற்கான வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் வெற்றி கிட்டும்.

இதையும் படிக்கலாமே:
கல்வி செல்வத்தை அள்ளித்தரும் சரஸ்வதி துதி தமிழில்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் மற்றும் பஞ்சாங்க குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we have Anjaneyar slokam in Tamil or Anjaneyar slogam in Tamil. It is also called as Hanuman slogam in Tamil or Hanuman slokam in Tamil. This needs to be chanted while starting to new work.