- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநிறைவேறாத கோரிக்கை நிறைவேற லட்டு பரிகாரம்

நிறைவேறாத கோரிக்கை நிறைவேற லட்டு பரிகாரம்

- Advertisement -

இந்த உலகத்தில் காரிய தடையை நிவர்த்தி செய்யக்கூடிய தெய்வங்களாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமானும் ஆஞ்சநேயரும் தான். மேலும் ஆஞ்சநேயர் என்பவர் சிரஞ்சீவி என்பதால் இன்றளவும் இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஆஞ்சநேயரை நாம் பல வேண்டுதலுக்காக வழிபாடு செய்வோம். பல விதங்களிலும் வழிபாடு செய்வோம். எந்த விதத்தில் நாம் வழிபாடு செய்கிறோமோ இல்லையோ ராமா ராமா என்று கூறினாலே போதும். அந்த இடத்தில் ஆஞ்சநேயர் தோன்றி நமக்கு அருள் புரிவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை லட்டுவை வைத்து எந்த முறையில் வழிபட்டால் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயர் லட்டு பரிகாரம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கோரிக்கை இருக்கும். அந்த கோரிக்கை நிறைவேறுவதற்காக பல முயற்சிகளை செய்வார்கள். சில கோரிக்கைகள் முயற்சி செய்த உடனே நடந்து விடும். இன்னும் சில கோரிக்கைகளோ இரண்டு மூன்று தடவை முயற்சி செய்த பிறகு நடக்கும். இன்னும் சில கோரிக்கைகள் இருக்கிறது அதை நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் நடைபெறாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.

- Advertisement -

இந்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக பல வேண்டுதலை கூட நாம் தெய்வங்களிடம் வைத்திருப்போம். இருப்பினும் அந்த கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கும். அப்படிப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு லட்டு வேண்டும். ஒரு அரச இலை வேண்டும். செந்தூரம் வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் ஆஞ்சநேயரின் கோவில்தான் செய்ய வேண்டும். அந்த கோவிலில் காலையிலும் மாலையிலும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகங்கள் நடைபெற வேண்டும். அப்படிப்பட்ட கோவிலாக பார்த்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

சனிக்கிழமை அன்று அரச இலையை பறிக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று நம்முடைய கைகளால் பறிக்கக் கூடாது. அவ்வாறு பறிப்பதாக இருக்கும் பட்சத்தில் அரச மரத்திடம் பரிகாரத்திற்காக உன்னுடைய இலையை பறித்துக் கொள்கிறேன் என்று அனுமதி வாங்கிவிட்டு பிறகு பறிக்க வேண்டும். அல்லது சனிக்கிழமையே இந்த இலைகளை பறித்து வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த இலைகளை எடுத்துக் கொண்ட ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்று அந்த இலையில் செந்தூரத்தை வைத்து சிறிது நல்லெண்ணை ஊற்றி இலை முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். இவ்வாறு தடவி முடித்த பிறகு ஆரஞ்சு நிறத்தில் இருக்கக்கூடிய லட்டுவை அந்த இலையின் மீது வைத்து ஆஞ்சநேயருக்கு நெய்வேத்தியம் செய்வது போல் காட்ட வேண்டும். அப்பொழுது உங்களுடைய கோரிக்கை என்னவோ அந்த கோரிக்கை விரைவில் நடைபெற வேண்டும் என்று வழிபட வேண்டும். பிறகு அந்த கோவிலிலேயே ஏதாவது ஒரு இடத்தில் இந்த லட்டுவை வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்து விட்டு மீண்டும் உங்களுடைய கோரிக்கையை ஆஞ்சநேயரிடம் கூற வேண்டும். இப்படி செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வரும் பொழுது நம்முடைய நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: தீராத மன குழப்பம் தீர குளிக்கும் முறை

மிகவும் எளிமையான இந்த லட்டு பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் ஆஞ்சநேயர் கோயிலில் செய்பவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்