- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீராத மன குழப்பம் தீர குளிக்கும் முறை

தீராத மன குழப்பம் தீர குளிக்கும் முறை

- Advertisement -

எதிர்பாராத நேரத்தில் கடவுளால் கொடுக்கப்படும் கஷ்டங்கள், மனிதர்களுக்கு அதீத மன பயத்தை கொடுத்து விடும். மனக்குழப்பத்தை கொடுக்கும். மன பயம் வந்துவிட்டால் நாம் உடனடியாக சோர்ந்து போக தொடங்கி விடுவோம். அன்றாடம் செய்யக்கூடிய சாதாரண வேலைகளை கூட சரியாக செய்ய மாட்டோம்.

பிரச்சனைகள் வருது, மனபயம் வருது, கூடவே சேர்ந்து முன் கோபமும் வந்துவிடும். யாரைக் கண்டாலும் எரிந்து எரிந்து விழுவோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து சுலபமாக வெளிவருவது எப்படி ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மன பயம் நீங்க குளிக்கும் முறை

எந்தப் பிரச்சனை வந்தாலும் முதலில் முன்கோபப்படக்கூடாது. கோபத்தை வெளிக்காட்டும் போது தான் நாம் தோற்றுப் போகின்றோம். அதற்காக கோபத்தை வெளிக்காட்டாமல், மனதிற்கு உள்ளவே வைத்திருந்தால் அதுவும் தீராத நோயை கொடுத்து விடும். நம்பிக்கையானவர்களிடம் உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள். பாரத்தை முதலில் இறக்கி வையுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை நாம் கடந்து செல்வோம் என்ற நம்பிக்கைக்குள் நீங்கள் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை நிச்சயம் உங்களுக்கு கொடுக்க மாட்டான் அந்த இறைவன்.

சரி, பிரச்சனை வரும்போது எப்படி குளித்தால் நமக்கு இருக்கும் மனபயம் குறையும் என்பதை இப்போது பார்த்து விடுவோம். கொஞ்சம் புதினா இலைகள், கொஞ்சம் துளசி இலைகள், இதற்கு தேவை. நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த இரண்டு இலைகளையும் கசக்கி போட்டு விடுங்கள். இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியையும் அந்த தண்ணீரில் போடவும். பத்து நிமிடங்கள் கழித்து அந்த தண்ணீரில் ‘ஓம்’ என்ற வார்த்தையை உங்களுடைய ஆள்காட்டி விரலால் எழுதிவிட்டு, இந்த தண்ணீரில் நீங்கள் குளித்து விடவும். தலைக்கு குளிப்பது சிறப்பு முடியாதவர்கள் உடம்புக்கு மட்டும் குளித்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

பிரச்சனை வரும்போது மட்டும் தான் இந்த தண்ணீரை பயன்படுத்தி குளிக்க வேண்டும் என்பது கிடையாது. வாரத்தில் ஒரு நாள் திங்கட்கிழமை இந்த தண்ணீரில் நீங்கள் குளித்து வர எப்போதுமே நீங்கள் குழப்பம் இல்லாமல் தெளிவான முடிவை எடுக்கும் மனிதர்களாக மாறிவிடுவீர்கள். இந்த வாசத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.

மாலை, அலுவலகத்தில் இருந்தோ வியாபாரம் செய்யும் இடத்திலிருந்தோ ரொம்பவும் டென்ஷனோடு வீடு திரும்புறீங்க. அந்த சமயத்தில் இந்த தண்ணீரில் குளித்தாலும் உங்களுடைய டென்ஷன் அப்படியே பாதியாக குறைந்து விடும். ரொம்பவும் டென்ஷனாக இருக்கும்போது, இரண்டு புதினா இலைகள், இரண்டு துளசி இலைகளை கசக்கி அப்படியே முகர்ந்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பிரிந்த உறவுகள் ஒன்று சேர பரிகாரம்

அந்த வாசத்தை சுவாசிக்கும் போதே உங்களுடைய பிரச்சனை குறைந்தது போல ஒரு உணர்வு தோன்றும். இந்த பிரச்சனையை நாம் சமாளித்து விடலாம் என்ற ஒரு தைரியத்தை கொடுக்கக் கூடிய வாசம் தான் இது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட சுலபமாக சமாளிக்கும் திறமை உங்களுக்கு வரும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்