அஞ்சறை பெட்டியில், குடும்பத் தலைவியின் கையால் இந்த 1 பொருளை நிரம்ப வைத்தாலே போதும். பெண்களின் கையில் கட்டுகட்டாக பணம் கட்டாயம் இருக்கும்.

அந்தக் காலத்திலிருந்தே குடும்பத் தலைவிகளின் வங்கி என்றால் அது அஞ்சறைப்பெட்டி தான். அந்த பெட்டியில் பணம் சேர்த்து வைத்த நம் பாட்டிமார்கள், எப்போதுமே பணம் இல்லை என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள். அந்த காலமாக இருந்தாலும் சரி, இனி வரப்போகும் காலங்களாக இருந்தாலும் சரி, பெண்களின் கையில் கட்டாயம் பணம் இருப்பு இருக்கவேண்டும். சமையலறையில் மளிகை பொருட்கள் கொட்டி வைத்திருக்கும் டப்பாவில், பணத்தை சேர்த்து வைக்கும் பழக்கம் இன்றும் பெண்களுக்கு உண்டு. பெண்கள் தங்களுடைய கைக்கு வரக்கூடிய, வீட்டில் இருக்கும் ஆண்கள் செலவுக்கு தரக்கூடிய பணமாக இருந்தாலும் சரி, தாங்களாகவே சம்பாதிக்கும் பணமாக இருந்தாலும் சரி, அதை யாருக்கும் தெரியாமல் சேர்த்து வைக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்வது கொஞ்சம் நல்ல விஷயம்தான்.

anjarai-petti1

அவசர தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள அந்த பணம் நிச்சயம் உதவியாக இருக்கும். இது பல பெண்களுக்கு தெரிந்த விஷயம் தான். சரி, நீங்கள் குடும்ப தலைவியாக இருந்து, உங்களுடைய கையில் பணத்தை சேமிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கான ஒரு சின்ன டிப்ஸை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே அஞ்சறைப் பெட்டி என்றால் அவரவர் விருப்பத்திற்கு தகுந்தவாறு மஞ்சள் தூள், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, வரமிளகாய் போன்ற பொருட்களை கொட்டி வைத்திருப்பார்கள். இந்த பொருட்களில் குறிப்பிட்டுச் சொல்லப் படும் மஞ்சள் தூள் கட்டாயம் எல்லோர் வீட்டு அஞ்சறைப் பெட்டியிலும் இருக்க வேண்டும். இரண்டாவதாக சோம்பை கட்டாயம் வைக்கவேண்டும்.

மூன்றாவது பொருளாக அஞ்சறைப்பெட்டியில் வேறு எந்த பொருட்களை வைத்து இருந்தாலும், ஒரு கிண்ணத்தில் கட்டாயம் வெந்தயத்தை நிரம்ப வைத்துக் கொள்ளுங்கள். அந்த வெந்தயத்தில் எப்போதும் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுவிட்டு அதன் பின்பு அந்த அஞ்சறைப் பெட்டியில் பணத்தை சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக கையில் பணம் தங்காத பெண்களிடத்திலும், பணம் தங்கும்.

- Advertisement -

சில பேர் வெந்தயத்தை அஞ்சரை பெட்டியில் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், நிச்சயம் அஞ்சறைப்பெட்டியில் வெந்தயம் இருந்தால், அதிர்ஷ்டத்தை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அஞ்சறைப் பெட்டியை எப்போதும் அசுத்தம் நிறைந்ததாக வைத்திருக்கக் கூடாது. சிலபேர் அஞ்சறைப் பெட்டிக்குள் வைத்திருக்கும் பொருட்களை வண்டு பிடித்து பூச்சி பிடித்து ஒரு பொருளோடு மற்ற பொருள் கலந்து கசகசவென வைத்திருப்பார்கள். அப்படியெல்லாம் இல்லாமல் எப்போதுமே சரியான முறையில் மெயின்டெய்ன் பண்ண பாத்துக்கோங்க.

anjaraipetti

அஞ்சறைப் பெட்டியில் ஒரு கிண்ணம் மட்டும் காலியாக இருக்கின்றது என்றால் கூட அதை அப்படியே விட்டு வைக்கக்கூடாது. பொருட்களால் நிரப்பி வைத்துக் கொள்வதுதான் நல்லது. அஞ்சரை பெட்டியில் இதோடு சேர்த்து ஒரு ஏலக்காயையும் வைத்துக்கொள்ளலாம். ஏலக்காய்க்கு என்று தனியாக ஒரு கிண்ணத்தை பயன்படுத்த முடியவில்லை என்றாலும், அஞ்சறைப்பெட்டி டப்பாவில், அதாவது கிண்ணத்தை அடுக்கி வைத்திருக்கும் வரிசைக்கு நடுவே சிறிய ஓட்டைகள் இருக்கும்.

அந்த இடத்தில் ஒரு ஏலக்காயை போட்டு வைத்தாலும் நம் வீட்டிற்கு அது சுபிட்சத்தை தேடித்தரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சின்ன சின்ன மாற்றத்தை உங்கள் அஞ்சறை பெட்டியில் கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக ஏதேனும் மாற்றம் உங்கள் வாழ்விலும் நிகழும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நீண்ட நாட்களாக தீரவே தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்க்கு கூட நிச்சயம் தீர்வு உண்டு. சுலபமான இந்த வழிபாட்டை செய்துதான் பாருங்களேன்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.