நீண்ட நாட்களாக தீரவே தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்க்கு கூட நிச்சயம் தீர்வு உண்டு. சுலபமான இந்த வழிபாட்டை செய்துதான் பாருங்களேன்!

murugar
- Advertisement -

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சொல்லுவார்கள். பணம் காசு சம்பாதித்து பணக்கார வாழ்க்கை வாழ்கிறோமோ இல்லையோ, நோய் நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும். நிம்மதி நிலைத்திருக்கும். பணம் வீன் விரையம் ஆகாது. அந்த வரிசையில் உங்களுக்கு நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் தீர வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன பரிகாரத்தை செய்யலாம். வாழ்நாள் முழுவதும் நோய் நம் உடலை அண்டாமல் இருக்க, மருந்து மாத்திரை சாப்பிடாமல் ஆரோக்கியமாக வாழ ஆன்மீக ரீதியாக எந்த பரிகாரத்தை செய்யலாம் என்பதை பற்றிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kamatchi-amman

முதல் பரிகாரமாக உங்களுக்கு உடலில் தீராத நோய்கள் இருந்தால், அதற்காக மருத்துவரிடம் சென்று அந்த நோய் தீருவதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தால், நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும். அதாவது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று உங்கள் கையாலேயே கல் உப்பை கொட்டி வர, உங்களது உடலில் இருக்கும் நோய் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உப்பை கொட்டிவிட்டு, சிகிச்சையை நிறுத்தி விடக்கூடாது. சிகிச்சை என்பது ஒரு பக்கம் போய்க் கொண்டே இருக்கட்டும். வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமை அன்றும் செவ்வாய்க் கிழமை அன்றும் அம்மனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் கையால் உப்பைக் கொட்டி வந்தால் நிச்சயம் உங்களுடைய ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

salt

இரண்டாவதாக நீங்கள் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, அல்லது நோய்நொடிகளால் அவதிப்பட்டு வந்து இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. பழனி முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு சந்தனத்தை பிரசாதமாக கொடுப்பார்கள்.

- Advertisement -

அந்த சந்தனம் சாதாரண பிரசாதம் அல்ல. இரவு சுவாமியின் சிலையில் சந்தனத்தை வைத்து, திரைபோட்டு நடையை சாத்தி விடுவார்கள். மறுநாள் அதிகாலை வேளையில் அந்த சந்தனத்தை எடுத்து தான் பக்தர்களுக்கு விநியோகம் செய்வார்கள். இந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருகி விட வேண்டும்.

pazani

இப்படி செய்தாலும் நம் உடம்பில் நோய் நொடிகள் அண்டாது என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பழனி முருகனின் தொப்புள் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் சந்தனம் எவருக்கு கிடைக்கின்றதோ அவர்கள் நிச்சயம் கொடுத்து வைத்தவர்கள் தான்.

- Advertisement -

pazani1

பழனி முருகனின் சிலையில் இருந்து சந்தனம் மொத்தமாக தான் எடுத்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும். அதில் குறிப்பிட்ட இந்த தொப்புள் பகுதியில் இருக்கக்கூடிய சந்தனம் எவருக்கு கிடைக்கின்றதோ அவர்களுக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் அதிகம் உள்ளது என்று கூட சொல்லலாம்.

santhanam

அது அவரவரது அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது. உங்களால் முடிந்தால் உங்களுடைய நோய்நொடி தீரவேண்டும் என்றால், நீங்களும் மேற்சொன்ன இரண்டு பரிகாரங்களை முயற்சி செய்து பார்க்கலாம் நம்பிக்கையோடு செய்தவர்கள் பலன் அடைந்துள்ளார்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பல வருடங்களாக இழுபறியில் இருக்கும் சொத்து பிரச்சனையை கூட, ஒரு நொடியில் முடிவுக்கு கொண்டுவர முடியும். இந்த வழிபாட்டை 6 வாரங்கள் செய்தால்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -