இந்த ரகசிய ஆன்மீக சாஸ்திர விதிகளை கடைபிடித்தால் போதும். நம்முடைய வாழ்வில் ஏராளமான பல நல்ல மாற்றங்கள் நிகழும்.

sasthiram
- Advertisement -

நமக்கு முன்னால் வாழ்ந்து, மறைந்த நமது முன்னோர்கள் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் நமக்கான பல நல்ல விடயங்களை செய்து வைத்து காலத்தோடு கலந்தனர். தங்கள் வாழ்ந்த காலத்தில், தாங்கள் அனுபவித்த நன்மை, தீமைகளை பகுத்தாய்ந்து நமக்கு சாஸ்திர நியதிகளாக வகுத்துச் சென்றனர். அந்த வகையில் நமக்கு தெரியாத சில ரகசிய ஆன்மீக சாஸ்திர விதிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

house

ஒரு வீட்டில் புதிதாக திருமணம் நடைபெற்று இருந்தால், அந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்குள்ளாக காது குத்துதல் சடங்கை செய்யக்கூடாது. சிலர் ஆண் குழந்தைகளுக்கு பூணூல் அணிவிக்கும் வழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அந்த பூணூல் அணிவிக்கும் சடங்கினையும் திருமணம் நடந்த ஆறுமாதத்திற்கு செய்யக்கூடாது. இந்த 6 மாத காலத்தில் புண்ணிய நதிகளைக் கடந்து செல்லும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள கூடாது.

- Advertisement -

தாங்கள் வசிக்கின்ற வீட்டிலிருந்து புதிதாக ஒரு வீட்டிற்கு இந்த ஆறு மாத காலத்திற்குள்ளாக குடியேரக்கூடாது. வாடகை வீட்டில் வசிப்பவர்களாக இருந்தால் புது வீட்டுக்கு ஒரு சுப நாளில், சூரிய உதயத்திற்கு முன்பாக குடியேறிவிட வேண்டும். புது வீட்டில் குடியேறிய பிறகு, அங்கு தங்கள் குலதெய்வத்திற்கென்று ஒரு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த குலதெய்வத்தின் ஆணைப்படியே தற்போது புது வீட்டிற்கு வந்ததாக நினைத்து, தோஷங்கள் ஏற்பட்டுவிட்டதோ என எண்ணி வருந்தாமல், தங்களின் அன்றாட கடமைகளை செய்ய வேண்டும்.

deepam2

ஒருவரின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று ஒரு சில காரியங்களை செய்யலாம் என முன்னோர்கள் சாஸ்திர விதிகளாக வகுத்துள்ளனர். புதிதாக கல்வி பயிலுதல், நிலம், தோட்டம் போன்றவற்றை வாங்குதல், குழந்தைகளுக்கு அன்னபிரசன்னம் எனப்படும் சடங்கு செய்தல், பூணூல் போட்டுக் கொள்ளுதல், யாகம் செய்தல் போன்ற செயல்களை ஒவ்வொருவரும் தாங்கள் பிறந்த நட்சத்திர தினமான ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யலாம். வளைகாப்பு, சீமந்தம், முடி இறக்குதல், முகச்சவரம், நோய்க்கு முதன்முதலாக மருந்து சாப்பிடுதல், வெளியூர் பயணங்கள், கடல் கடந்த பயணங்கள் போன்றவற்றை ஒருவரின் ஜென்ம நட்சத்திர நாளில் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

கடன் வாங்கி அதை சரியாக திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் போது ஏற்படும் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. சில குறிப்பிட்ட நாட்களில் கடன் வாங்கினால் அதை திருப்பி செலுத்த முடியாது என சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. மாத பிறப்பு, அஸ்தம் நட்சத்திரத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை இந்த தினங்களில் கடன் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால் தீர்க்க முடியாத கடனாக அது வளர்ந்து கொண்டே போகும்.

kadan

அதே நேரத்தில் செவ்வாய்க்கிழமை அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் கடனை விரைவில் முழுவதுமாக அடைக்க முடியும். புதன்கிழமை அன்று மட்டும் நீங்கள் வாங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை செலுத்தினால், மீண்டும் மீண்டும் கடன் வாங்கவும், வாங்கிய கடனை கட்ட முடியாமல் போகும் நிலையும் உருவாகும்.

தங்களுக்கென்று புதிதாக வீடு, வாகனம், நகை இதர வீட்டு உபயோக பொருட்கள் போன்றவற்றை வாங்க புதன்கிழமை சிறப்பான நாளாகும். ஞாயிற்றுக்கிழமைகளிலும் புதிய பொருட்களை தாராளமாக வாங்கலாம். “அசுவதி, சித்திரை, சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி” நட்சத்திர தினங்களில் புதிய பொருட்களை வாங்குவதால் மேலும் புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

mixies

அதே போன்று தங்களிடம் இருக்கின்ற பழைய பொருட்களை விற்க நினைப்பவர்கள் “பரணி, கிருத்திகை, ஆயில்யம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி” ஆகிய நட்சத்திர தினங்களில் விற்கலாம். பழைய பொருட்களை விற்க வாரத்தில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகியவை ஏற்ற தினங்களாக இருக்கின்றன.

- Advertisement -