அன்னபூரணிக்கு போடும் அரிசி இப்படி மட்டும் இருக்கவே கூடாது! அன்னபூரணிக்கு எந்த அரிசியை போடுவது செல்வ செழிப்பை தரும் தெரியுமா?

anna-poorani-rice
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் பூஜை அறையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒன்று அன்னபூரணியின் சிலையாகும். அன்னபூரணியின் சிலை வைத்திருப்பவர்கள் அதற்கு கட்டாயம் தினமும் அரிசி போட்டு கொண்டே இருப்பார்கள். அல்லது வாரம் ஒரு முறை பூஜை செய்யும் பொழுது அரிசியை மாற்றி புது அரிசியை போட்டு வைப்பது வழக்கம். அப்படி போடும் அரிசி எந்த அரிசியாக இருக்க வேண்டும்? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

Annapoorani

அன்னபூரணியின் அருள் இருந்தால் வறுமை இன்றி செல்வ செழிப்புடன் வாழ முடியும். ஒருவருடைய கஷ்ட காலத்திற்கு காரணம் வறுமை தான். வறுமையை நீக்க கூடிய ஆற்றல் அன்னபூரணிக்கு உண்டு. எனவே எப்பொழுதும் வீட்டில் அன்னபூரணியின் படம் அல்லது சிலை வைத்திருக்க வேண்டும். குறிப்பாக சமையலறையில் அன்னபூரணியின் படம் வைத்திருப்பது மிகவும் விசேஷமான பலன்களைக் கொடுக்கக் கூடியது ஆகும். கல்லுப்பு ஜாடி வைக்கும் இடங்களில் அன்னபூரணியின் படத்தை ஒட்டி வைப்பது சிறப்பு. அன்னபூரணியும், மகாலட்சுமியும் இணையும் பொழுது நமக்கு வறுமையும் இல்லாமல், செல்வமும் செழிப்பும் உண்டாகும்.

- Advertisement -

இரவில் அன்னபூரணி மற்றும் மகாலட்சுமி ஆகியோர் மிகுந்த பசியுடன் நம் வீட்டிற்கு வருவார்களாம். அப்படி வரும் பொழுது அடுப்படியில் எதுவுமே இல்லை என்றால் அவர்கள் வாடி போய் விடுவார்கள். எனவே இந்த காரணத்தினால் தான் இரவு தூங்கும் பொழுது அடுப்பின் மீது ஏதாவது ஒரு பாத்திரத்தை வைத்து விட்டு தூங்க வேண்டும் என்று கூறுவார்கள். வெறும் அடுப்பை அப்படியே விட்டு விட்டு செல்லக் கூடாது. இரவு மீறும் சாதம் இருந்தால் அதில் தண்ணீரை ஊற்றி அடுப்பின் மீது வைத்து விடலாம். எதுவுமே இல்லை என்றாலும் ஒரு சிறிய கிண்ணத்தில் 4 பருக்கைகள் ஆவது போட்டு தண்ணீர் ஊற்றி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இப்படி செய்ய பசியுடன் வரும் மகாலட்சுமி மற்றும் அன்னபூரணி தாயார் அதனை மனமுவந்து ஏற்று நமக்கு அருள் புரிவார்கள்.

annapoorani

மேலும் அன்னபூரணி சிலை சிறிய அளவிலாவது பித்தளை அல்லது செம்பு போன்ற உலோகங்களில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அதில் அன்னபூரணி கரண்டியை வைத்து கொண்டிருப்பார். அன்னபூரணியை வெறும் தரையில் வைக்கக் கூடாது. எனவே கீழே ஒரு சிறிய அளவிலான பித்தளை அல்லது செம்பு தட்டு ஒன்று வைத்துக் கொண்டால் நல்லது. அந்த தட்டிலும் அரிசியைப் பரப்பி அதன் மீது அன்னபூரணியை அமர்த்த வேண்டும்.

- Advertisement -

அவர் கைகளில் ஏந்தியிருக்கும் கரண்டியிலும் அரிசியை போட்டு வைக்க வேண்டும். அப்படி போடும் அரிசியானது நீங்கள் பயன்படுத்தும் புழுங்கலரிசி ஆக இருக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எப்பொழுதும் பூஜைக்கு பச்சரிசியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே அன்னபூரணி தாயாருக்கு வைக்கும் அரிசியானது பச்சரிசி ஆக இருப்பது மட்டுமே சிறப்பு தரும். அரிசி தானே என்று ஏதாவது ஒரு அரிசியை போட்டு வைக்காதீர்கள்! குறிப்பாக நாம் சமையலுக்கு பயன்படுத்தும் புழுங்கல் அரிசியை போட கூடாது.

அதே போல கடவுளுக்கு நெய்வேத்தியம் வைக்கும் பொழுதும் பொங்கல் செய்ய பச்சரிசியை பயன்படுத்துவது தான் நல்லது. எல்லோருமே அந்த அரிசியை தான் பயன்படுத்துவது வழக்கம் எனவே புழுங்கல் அரிசியை தவிர்த்து பச்சரிசியை அன்னபூரணிக்கு இட்டு அன்னபூரணியின் பரிபூரண அருளைப் பெற்றுக் கொள்ளுங்கள். வாரம் ஒரு முறை அந்த அரிசியை காக்கை, குருவிகளுக்கு போட்டு விடலாம். அல்லது அவற்றை சேகரித்து வைத்து மாவாக்கி அந்த மாவை வைத்து கோலம் போடுவது இன்னும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்

- Advertisement -