அன்னபூரணி சிலை வைத்திருப்பவர்கள் அந்த அரிசியை என்ன செய்யணும்னு தெரியுமா? தெரியாமல் கூட இந்த தப்பை பண்ணிராதீங்க வறுமை வரும்!

annapoorani-rice
- Advertisement -

பூஜை அறையில் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு சிலை அன்னபூரணி சிலை ஆகும். பலருடைய வீட்டில் இந்த சிலை இருப்பது கிடையாது. வறுமை தாண்டவம் ஆடாமல் இருக்க ஏழேழு பிறவிகளுக்கும் தன, தானியத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்க அன்னபூரணியை வழிபடுவது மரபு! இந்த அன்னபூரணி சிலையை வீட்டில் பூஜை அறையில் வைத்திருப்பவர்கள் அதற்கு தினம் தோறும் அரிசி போடுவது வழக்கம். இப்படி போடும் அரிசியை என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்முடைய வீட்டு பூஜை அறையில் எப்பொழுதும் சிறிய அளவிலான பித்தளை அல்லது செம்பினால் ஆன அன்னபூரணி சிலையை வைத்து வழிபடுவது ரொம்பவே நல்லது. எப்பொழுதும் உணவிற்கு பஞ்சம் இல்லாமல் சுபிட்சம் நிலவ இந்த அன்னபூரணி வழிபாடு அவசியம் தேவை. அன்னபூரணி படத்தை சிலர் பூஜை அறையில் மட்டும் அல்லாமல் சமையல் அறையிலும் மாட்டி வைத்திருப்பார்கள்.

- Advertisement -

அன்னபூரணியை வணங்கி விட்டு சமைக்கும் பொழுது அதன் ருசியே தனித்துவமாக இருக்குமாம். முதன் முதலில் சமைப்பவர்கள் அன்னபூரணியை வணங்கி விட்டு தினம்தோறும் சமைக்க பழகினால் சீக்கிரமே கை பக்குவம் வந்துவிடுமாம். அந்த அளவிற்கு மகத்துவமான பலன்களை கொண்ட இந்த அன்னபூரணி சிலைக்கு தவறாமல் தினம்தோறும் சிறிதளவு அரிசியை போட்டு வர வேண்டும்.

பூஜை செய்தால் தான் அரிசி மாற்ற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பூஜை செய்யாவிட்டாலும் அன்றைய நாள் குளித்து முடித்த பிறகு சிறிதளவே ஆயினும் அரிசியை மாற்றி விட வேண்டும். இப்படி நீங்கள் புதிதாக மாற்றக்கூடிய அரிசியை எக்காரணம் கொண்டும் குப்பையில் மட்டும் போட்டு விடக்கூடாது. எவருடைய கால்களிலும் மிதிபடும்படி நீங்கள் கீழே சிந்தக்கூடாது. பொதுவாகவே அரிசியை கீழே சிந்த விடக்கூடாது. அது மற்றவர்களுடைய கால்களில் பட்டால் உங்களுக்கு அன்னதோஷம் உண்டாகும். இது உங்களுடைய சந்ததியினரையும் தொடரும் தோஷம் ஆகும். அவர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்காக திண்டாட வேண்டிய நிலை வரலாம்.

- Advertisement -

அன்னபூரணி சிலையில் நாம் போடக்கூடிய அரிசியை காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போட்ட பிறகு எறும்பு புற்றுகளில் போட்டு விடலாம். எறும்பு சாப்பிட்டால் நம்முடைய பாவங்கள் கழியும் என்பது ஜோதிட பரிகாரங்களில் ஒன்றாக இருக்கிறது. அல்லது பறவைகளுக்கு மொட்டை மாடிகளில் தானியங்களை தூவுவது போல அரிசியை தூவி அவைகளுக்கு உணவிடலாம். வாயில்லா ஜீவராசிகள் இவை உட்கொள்வதன் மூலம் நம்முடைய பாவங்கள், தோஷங்கள் நீங்கி வீட்டில் வறுமை ஏற்படாமல் இருக்கும்.

மேலும் இந்த அரிசியை சேகரித்து வைத்து அதனுடன் வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை பசு மாட்டிற்கு தானம் கொடுக்கலாம். பசு மாட்டிற்கு பச்சரிசியும், வெல்லமும் சேர்த்து தானம் கொடுக்கும் பொழுது பித்ரு தோஷங்கள் நீங்கும். மேலும் பல்வேறு பிரச்சனைகள் நமக்கு தெரியாமலேயே நம்மை விட்டு நீங்குவதாக ஐதீகம் உண்டு. எனவே பச்சரிசியுடன் இந்த அரிசியை சேர்த்து நீங்கள் பசுவிற்கு தானம் கொடுக்கலாம்.

- Advertisement -