ஏழேழு பிறவிக்கும் வறுமை ஏற்படாமலிருக்க இந்த 4 வரி மந்திரத்தை வெள்ளிக்கிழமைகளில் சொன்னாலே போதுமே!

annapoorani-rice
- Advertisement -

பணம், காசை விட வறுமை இல்லாத வாழ்வு தான் அனைவருக்கும் தேவை. அதைக் கொடுப்பது அன்னபூரணி தாய் ஒருவரே ஆவார். எது இல்லாமலும் இருந்து விட முடியும்! பசியில்லாமல் இருக்க முடியுமா? இந்த அரை சாண் வயிற்றுக்கு தான் இத்தனை போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தேவையானதை ஈட்டப்போய் பழிகளையும், பாவங்களையும் சுமந்து வருகிறோம். வறுமை இல்லா வாழ்வு பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Annapoorani

ஒவ்வொருவரும் அன்னபூரணியை நினைத்து தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அரிசி வைக்கும் இடத்தில் மஞ்சளுடன் சேர்த்து ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது போல சமையலறையிலும் விளக்கேற்றி வைப்பது விசேஷமான பலன்களை கொடுக்கும்.

- Advertisement -

எல்லோருடைய சமையலறையிலும் கட்டாயம் அல்லது பூஜை அறையில் ஆவது அன்னபூரணியின் படம் அல்லது சிலை வைத்திருப்பது மிகவும் நல்லது. அன்னபூரணியின் சிலையில் வெள்ளிதோறும் அரிசி போட்டு விளக்கு ஏற்றினால் சுபிட்சமும் உண்டாகும். வீட்டில் இருக்கும் குழந்தைகளின் கையில் அரிசியை கொடுத்து போடச் சொல்வது இன்னும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.

annapoorani

வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணியை நினைத்து கீழ்வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். தொடர்ந்து இதுபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்து வருபவர்களுக்கு ஏழேழு பிறவிக்கும் வறுமை இல்லா வாழ்வு அமையும் என்பது ஐதீகம். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனையும் பிறவியிலும் வறுமையில் ஏற்படாமலிருக்க அன்னபூரணியின் அருளை பரிபூரணமாக பெறுவது அவசியமாகும்.

- Advertisement -

அன்னபூர்ணா ஸ்தோத்ரம்:
நித்யானந்தகரீ வராபயகரீ லௌந்தர்யரத்னாகரீ
நிற்தூதாகில கோரபாபநிகரீ ப்ரயக்ஷமாகேச்வரி
ப்ராலேயாசல வம்சபாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹிக்ருபாவலம்பனகரீ மாதாந்நபூர்ணச்வரீ

annapoorani

இப்பாடலில் இடம் பெற்றிருக்கும் கருத்துக்கள் அன்னபூரணியிடம் பிட்சை கேட்பதாக அமைந்துள்ளது. கைகளில் வரம் நித்தியானந்தம், அபயம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் அழகிய சமுத்திரம் போன்றவள் என்றும், கொடூர பாவங்களைக் கூட நீக்கி நேரில் அருள் புரியும் மகேஸ்வர ரூபம் கொண்டவள் என்றும் வர்ணிக்கப்படுகிறது. மேலும் இமயமலையின் வம்சத்தை வளர்த்து பரிசுத்தமாக்கி, காசியில் இருந்து அருள் புரிபவள் என்றும், கருணையையே பொழியும் அன்னபூரணி தாயே எனக்கு பிட்சை கொடுப்பாயாக! என்று கேட்கப்படுவது போல குறிப்பிடபட்டுள்ளது. இப்பாடலை எவர் ஒருவர் தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அன்னபூரணியை நினைத்து உச்சரிக்கிறார்களோ அவர்களுக்கு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் வறுமை என்பது ஏற்படாது.

- Advertisement -