சமையலறையில் நாம் செய்யும் இந்த சிறு மாற்றம். நம் சந்ததிக்கே அன்னதோஷம் என்பதே வராமல் தடுத்து விடும். அன்ன தோஷத்தை நீக்க இதை விட எளிய வழி இருக்கவே முடியாது.

Annapurani agal dheepam
- Advertisement -

சமையலறையில் நாம் செய்யும் ஒரு சில மாற்றங்கள் நமக்கும் நம் சந்ததியினருக்கும் அன்னதோஷம் என்பதே ஏற்படாமல் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது. முதலில் அன்னதோஷம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். சிலர் வறுமையின் காரணமாக சாப்பாட்டிற்கு வழியில்லாமல் துன்பப்படுவார்கள் அது ஒரு வகை. ஒரு சிலரிடம் எல்லாமும் இருக்கும் ஆனால் அவர்களால் எதையும் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிடக் கூடாத வியாதிகள் வந்து கொண்டே இருக்கும். இப்படியான இந்த தோஷத்தை நீக்க சமையலறையில் நாம் செய்யும் இந்த ஒரு மாறுதல் அனைத்தையும் சரி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த அன்னதோஷத்தை நீக்க அன்னத்திற்கெல்லாம் தாயான அன்னபூரணி தாயாரை தான் நாம் வழிபட வேண்டும். அன்னபூரணி தாயாரை வழிபட வேண்டும் என்றால், அவர்களை நாம் பூஜை அறையில் வைத்து வழிபடுவோம். அப்படி வழிபடுவதை விட  சிறப்பு நாம் சமைக்கும் இடத்தில் அவர்களை வைத்து வழிபடுவது.

- Advertisement -

சமையலறையில் அவர்களை வைத்து வழிபடுவது என்றால் அப்படியே எடுத்துக் கொண்டு போய் வைத்து விடுவது அல்ல. அவர்களை சமையலறையில் நாம் சமைக்கும் பொழுது நம்முடைய முகம் அவர்களைப் பார்த்தபடி வைக்க வேண்டும். அப்படி வைத்து தினமும் காலையில் சமையல் வேலை தொடங்கும் முன்பு அன்னபூரணி தாயாருக்கு விளக்கு ஏற்றி வணங்கிய பிறகு வேலையை தொடங்க வேண்டும். அதே போல்  நீங்கள் சாதம் வடித்த உடன் கொஞ்சம் சாதத்தை நெய் கலந்து தாயாருக்கு நெய்வேத்தியமாக படைத்து வந்தால் குடும்பம் என்றென்றைக்கும் வறுமை என்ற வார்த்தைக்கு வழியில்லாமல் வாழும்.

பொதுவாக அன்னபூரணி தாயார் எந்த திசையில் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் நாம் அவரை பார்த்த படி நின்று சமைக்கும் போது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது. அன்னபூரணி படம் இருந்தால் அவர்களை அப்படியே வைத்து வணங்கலாம். அன்னபூரணி விக்கிரகங்களை வைத்து வணங்கும் போது தாயாரின் கையில் கரண்டி இருப்பது போல் வைக்க வேண்டும். தாயாரின் கையில் கரண்டி இல்லாமல் இருக்கும் விக்கிரகத்தை வைத்து வணங்கவே கூடாது. அது மட்டும் இன்றி அந்த கரண்டி உடைந்து இருந்தாலும் அல்லது சேதம் அடைந்திருந்தாலும் அப்படியே வைத்து வணங்குவதும் நல்லதல்ல.

- Advertisement -

இது மட்டும் இன்றி பெரும்பாலும் பச்சரிசியின் மேல் அன்னபூரணி தாயாரின் சிலையை வைத்து இருப்பார்கள். அப்படி வைக்காமல் அரிசி உள்ளே கொஞ்சம் அழுத்தி இருக்கும்படி வைக்க வேண்டும். அரிசியை விட நெல் வைத்து அதன் மேல் அவர்களை வைத்து வழிபடுவது மிகவும் விசேஷமானது. அரிசி நெல் இவற்றில் ஒரு ரூபாய் நாணயமாவது போட்டு வைக்கும் பொழுது இது குடும்பத்திற்கு மேலும் சுபிக்சத்தை உண்டாகும்.  அன்னபூரணி தாயாரை இப்படி ஏதாவது ஒரு தானியத்தின் மேல் தான் அமர வைக்க வேண்டும் தனியாக வைக்க கூடாது.

சமையல் அறையில் அசைவம் சமைக்கும் நேரங்களில் மட்டும் தாயாரின் படத்திற்கு ஒரு ஸ்கிரீன் போட்டு மறைத்து விடுங்கள். அன்னபூரணி என்றால் சாதத்திற்கு பிரதானமானவர்கள் தான். அது எந்த வகையாக இருந்தாலும் ஒரு பாதகம் இல்லை. எனவே அசைவம் சமைக்கும் போது இந்த ஒரு செயலை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். அது மட்டும் இன்றி சமையலறையில் அன்னபூரணி தாயாரை வைத்து வணங்கும் போது அடுப்பின் அனல் அவர்களின் மேல் படும்படியும் வைக்கக் கூடாது. திசை நம்மை பார்த்தபடி இருக்க வேண்டுமே தவிர நெருப்பின் அருகே இருக்கக் கூடாது. இதை சற்று கவனமாக பார்த்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சமையலறையில் இந்த செடி இருந்தால் அது வளர்வதை போல் உங்கள் வீட்டில் பண வரவும் அதிகரித்துக் கொண்டே செல்லும். நம்மை தேடி பணத்தை வர வைக்கும் அதிசய செடி.

இந்த ஒரு சின்ன மாறுதலை செய்து அன்னபூரணி தாயாரை வழிபட்டு வந்தால் நமக்கும் நம் சந்ததியினருக்கும் அன்னதோஷம் என்பது ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. மனிதனின் அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை, உறைவிடத்தில் கூட, உணவிற்கு தான் அதிக முக்கியதுவம்மே. அப்படியான அன்னத்திற்கே தோஷம் ஏற்பட்டு, நாம் படும் துன்பத்தை  இந்த வழிகளில் தவிர்த்து விடலாம் என்றால் நாமும் முயற்சி செய்து பார்க்கலாம். இந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து அன்னதோஷம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -