- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுகச் சுருக்கங்கள் மறைந்து, நீங்கள் பத்து வயது குறைந்து போல் தோற்றமளிக்க இந்த ஒரு மேஜிக்...

முகச் சுருக்கங்கள் மறைந்து, நீங்கள் பத்து வயது குறைந்து போல் தோற்றமளிக்க இந்த ஒரு மேஜிக் க்ரீமை வீட்டிலேயே செய்து கொள்ளுங்கள்

- Advertisement -

இன்றைய அவசர உலகத்தில் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்பும் பெண்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் காலை முதல் இரவு வரை அனைத்து நேரமும் வேலை செய்வதிலேயே கவனமாக இருக்கின்றனர். இதனால் தங்கள் அழகை பராமரித்து கொள்வதற்கு அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே வாரத்தில் ஒருநாள் விடுமுறை என்றாலும் அந்த நேரத்தில் எப்படி ஓய்வெடுக்கலாம் என்று தான் தோன்றும். ஆகவே ஒரு சிலர் தங்களின் அழகை பராமரிப்பதற்காக பியூட்டி பார்லருக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு சென்று ஆயிரக்கணக்கில் பணத்தை செலவு செய்து தங்கள் அழகை மேம்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறான செயல்கள் சிறிது நாட்களில் உங்கள் சருமத்தை பாதிப்படையச் செய்யும். ஏனென்றால் அங்கு பலவிதமான வேதியல் பொருட்கள் கலக்கப்பட்ட கிரீம்கள் உங்கள் அழகை சீக்கிரத்தில் குறைத்து விடும். எனவே நீங்கள் தொடர்ந்து அழகாக இருக்க இந்த ஹோமேட் பிளீச்சிங் க்ரீமை எப்படி தயார் செய்து கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
காபி பவுடர்– 2 ஸ்பூன், பால் – 3 ஸ்பூன், சோள மாவு – 2 ஸ்பூன், பிளாக் சீட் – ஒரு ஸ்பூன், ஆலிவ் ஆயில் – ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இரண்டு ஸ்பூன் காபி பவுடர் மற்றும் 3 ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை அடுப்பின் மீது வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து லேசாக கலந்து விடவேண்டும்.

பிறகு இவற்றுடன் இரண்டு ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். இவை கெட்டியாக பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அனைத்துவிட வேண்டும். பிறகு இதனை ஆற வைத்து, வடிகட்டி பயன்படுத்தி வடித்து எடுக்க வேண்டும். பிறகு ஃப்ளாகசீடை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனையும் அடுப்பின் மீது வைத்து சூடுபடுத்த வேண்டும். கொஞ்ச நேரத்தில் இவை கொழகொழப்பான பதத்திற்கு வந்தவுடன், அடுப்பை அனைத்து விட்டு, ஒரு கிண்ணத்தில் சிறிய துணி வைத்து, அதில் இதனை சேர்த்து கைகளை பயன்படுத்தி நன்றாக பிழிந்து எடுக்கும் பொழுது கொழகொழப்பு பேஸ்ட்டு மட்டும் தனியாக வந்துவிடும். பின்னர் ஏற்கனவே செய்து வைத்துள்ள காபி பேஸ்ட்டுடன் இதனையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து, மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். இதில் இருந்து இரண்டு ஸ்பூன் க்ரீம் எடுத்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக அப்ளை செய்து, மசாஜ் செய்து, 20 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ, முகம் பளிச்சென்று மாறிவிடும்.

சற்று முன்