வீட்ல அப்பளம் இருக்கா, அப்ப உடனே ரொம்ப டேஸ்டான இந்த சமோசா செஞ்சு உங்க குட்டீஸ்க்கு கொடுங்க. சமோசாவை இதை விட சுலபமா செய்யவே முடியாது.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிற்றுண்டியை வேண்டாம் என்பவர்கள் யாரும் இல்லை. அதிலும் வித்தியாசமான சிற்றுண்டிகளை சாப்பிட வேண்டும் என்று அதிகம் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு வித்தியாசமான சிற்றுண்டி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் பார்க்க போகிறோம். அனைவருடைய வீட்டிலும் அப்பளம் கண்டிப்பாக இருக்கும். அதே போல் முட்டையும் கண்டிப்பாக இருக்கும். இப்படி வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து தான் இன்று நாம் சிற்றுண்டி செய்யப் போகிறோம்.

இதற்கு முதலில் நாம் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு அதில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி கிண்ட வேண்டும். இதனுடன் சிறிது கொத்தமல்லி தழைகளையும் பொடியாக நறுக்கி போட வேண்டும். இதற்கு தேவையான உப்பையும் சேர்த்து நன்றாக கிளறி முட்டை வெந்ததும் அதை இறக்கி விட வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது 5 அப்பளத்தை எடுக்க வேண்டும். முழு ரவுண்டு அப்பளமாக இருக்க வேண்டும். அதை எடுத்து தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடம் ஊற வைக்க வேண்டும். அப்பளம் ஊறியதும் அது மிகவும் மிருதுவாக மாறி விடும். ஊறிய அப்பளத்தை எடுத்து, சிறிது நேரம் உலர விட வேண்டும். அது உலர்வதற்குள் ஒரு கிண்ணத்தில் மைதா மாவை கொஞ்சம் எடுத்து அதில் சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அந்த அப்பளத்தை எடுத்து அதன் நடுவில் முட்டை பொரியலை வைக்க வேண்டும். அந்த அப்பளத்தை மைதா மாவின் துணை கொண்டு சமோசா மாதிரி மடித்து ஒட்ட வேண்டும். இவ்வாறு அனைத்து அப்பளத்தையும் தயார் செய்து வைத்துக் கொண்டு, அடுப்பில் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி வேண்டும். அந்த எண்ணெய் காய்ந்ததும் இந்த அப்பள சமோசாவை எண்ணெயில் போட்டு, அப்பளம் நன்றாக பொரிந்ததும் எடுத்து வைத்து விட வேண்டும்.

- Advertisement -

முட்டை பொரியலையும், அப்பளத்தையும் தனி தனியாக சாப்பிட்டு பார்த்திருக்கிறோம். இந்த இரண்டையும் சேர்த்து ஒன்றாக சாப்பிடும் பொழுது அதன் சுவை வேறு விதமாக இருக்கும். முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்தும் கூட இந்த அப்பள சமோசாவை தயார் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி, பூரிக்கு உருளைக்கிழங்கு காலிஃபிளவர் கிரேவியை இப்படி மட்டும் செஞ்சிங்கன்னா, இனி சிக்கன் மட்டன் பக்கம் போகவே மாட்டீங்க. டேஸ்ட்டு வேற லெவல்ல இருக்கும்.

மிகவும் சுவையான, அருமையான, எளிமையான இந்தஅப்பள சமோசாவை. திரும்ப திரும்ப இதையே செய்ய சொல்லி கேப்பாங்க.வீட்டில் செய்து அனைவரும் ருசித்து மகிழலாம்

- Advertisement -