ஏப்ரல் மாத ராசி பலன் 2018

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசி நண்பரகளே இந்த மாதம் நீங்கள் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். அப்படி செல்கையில் விலை உயர்த்த பொருட்கள் சிலவற்றை வாங்கும் யோகம் உங்களுக்கு இந்த மாதம் உண்டு. உடல் ரீதியாக நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. சிற்சில மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். எனினும் வீண் விவாதங்களை வளர்க்காமல் இருப்பது உங்களுக்கு நல்லது. நண்பர்களாலும், உறவுங்களாம் பண வரவு அதிகரிக்க வாய்ப்புண்டு. அதே போல வாங்கிய கண்டங்களை அடைக்கவும் வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளை தவிர்பது நல்லது. வியாபாரம் சற்று மந்தமாக இருந்தாலும் நஷ்டம் ஏற்படாது. பணிக்கு செல்பவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

மேஷ ராசி தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசி நண்பர்களே இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். தெய்வங்களின் அருளாசி உண்டு. அறிவு சம்மந்தமான தொழில் செய்வோருக்கு இந்த மாதம் அதிக லாபம் கிடைக்கும். வழக்கத்தை விட பண புழக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சகோதர சகோதரிகளோடு பிரச்சனைகள் இருந்தால் தீரும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவுவர். உறவினர்களின் ஆதரவு இந்த மாதம் உங்களுக்கு உண்டு. கணவன் மனைக்குள் சில பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் சமாதானம் அடைவீர்கள். தொழில் செய்வோர் கடன் கொடுங்கும்போது கவனமாக இருப்பது நல்லது. பண்ணிக்கு செல்பவர்களுக்கு இந்த மாதம் பணி சுமை சற்று அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

மிதுனம்:
Mithunam Rasiமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இதுவரை உங்களுக்கு இருந்துவந்த காரிய தடைகள் விலகும். அதன் காரணமாக இந்த மாதம் முழுக்க நீங்கள் பரபரப்பாக ஏதவது ஒரு வேலையில் ஈடுபட வாய்ப்புண்டு. உறவினர்களும் நண்பர்களும் போற்றும் வகையில் உங்கள் செயல் திறன் இருக்கும். உங்கள் பேச்சி திறனால் நன்மை அடையும் காலம் இது. குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். உங்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கான விடை கிடைக்கும். தாய் மற்றும் தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு. அறிவு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுளோர்களுக்கு பதவி உறவு போன்ற நல்ல விடயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் உழைப்பிற்கு ஏற்ற பலன் இருக்கும்.

கடகம்:
Kadagam Rasiகடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் தேவையாற்ற வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆரம்பத்திலேயே குடும்ப செலவில் சிக்கனம் செய்வது நல்லது. சில நேரங்களில் உங்களுடைய கோபத்தால் உங்களுக்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளது. ஆகையால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மாத கடைசியில் பாக்கெட்டில் பணம் இல்லை என்றாலும் நண்பர்கள் முடிந்தவரை உதவுவர். ஆனாலும் இந்த மாதம் நீங்கள் கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அதே போல கடன் கொடுத்தும் ஏமாற வேண்டாம். பெற்றோரிடமும் கணவன் மனைவிக்கு இடையேயும் தேவையற்ற வாக்கு வாதங்கள் வர வாய்ப்புள்ளது. அதனால் உங்களுக்கே நஷ்டம். ஆகையில் எந்த ஒரு பிரச்சனையையும் ஆரம்பத்திலே விட்டு கொடுப்பது நல்லது. தொழில் புரிவோர் புது யுக்திகளை கையாண்டால் நல்ல லாபம் இருக்கும். பணி இடங்களில் நர் பெயர் கிடைக்கும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களின் பொருளாதார நிலை ஓர் அளவிற்கு உயரும். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். உறவுணர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும் அதனால் சிலர் ஆன்மீக பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையில் சில பிரச்சனைகள் வந்து மறையும். அலுவலகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. தாய் தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை தொழில் செய்வோருக்கு இந்த மாதம் ஏறுமுகமாக இருக்கும்.

- Advertisement -

சிம்ம ராசி தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கன்னி:
Kanni Rasiகன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு மன அமைதி அதிகரிக்கும். இதுவரை இருந்து வந்த மன குழப்பங்கள் தீரும். எதையும் சரியாக திட்டமிட்டு செய்தால் அதில் நீங்கள் வெற்றி காணும் காலம் இது. சமூக பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் உண்டு. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வேறு வீடு மாறிச்செல்ல வாய்ப்பிகள் உண்டு. உறவுகளுக்கு இடையே இருந்து வந்த மன கசப்பு நீங்கும். தீவை இல்லாமல் வீண் விவகாரங்களில் தலை இட வேண்டாம். அதனால் உங்களுக்கே பாதிப்பு அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை நன்கு ஊக்குவிப்பார்கள். சமூகத்தில் பெரிய இடத்தில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் செய்வோர்க்கு லாபம் அதிகரிக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு போன்ற நல்ல விசயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் உங்கள் அறிவுக்கூர்மையால் பல காரியங்களை சாதிக்க நேரிடும். கணினி சம்மந்தமான துறைகளில் இருப்பவர்கள் பாராட்டுகளை பெறுவர். பணிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல்நலத்திற்கும் கொடுப்பது நல்லது. சொத்துக்களால் சில பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதே போல தேவை இல்லாத வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகையால் தேவையற்ற செலவுகளை மாத துவாக்க்கத்தில் இருந்தே குறைப்பது நல்லது. பெரிய முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடுகள் மூலம் லாபம் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவர். தேவை இல்லாத வீண் பிரச்சனைகளுக்கு செல்லவேண்டாம். அதன் மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு கூடும்.

விருச்சிகம்:
Virichigam Rasiவிருச்சிக ராசி நண்பர்களுக்கு இந்த மாதம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக ஈடுபாட்டால் மனம் அமைதி கொள்ளும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடிந்தவரை முயற்சி செய்வீர்கள். வாழ்கை துணை உங்களுக்கு இந்த மாதம் உறுதுணையாக இருப்பார்கள். சொந்த வீடு வாங்குதல், சொந்த மனை வாங்குதல் போன்ற கனவுகள் சிலருக்கு ஈடேற வாய்ப்புகள் உண்டு. உங்களின் உடல் நலத்திலும் பெரியோர்களின் உடல்நலத்திலும் கவனம் தேவை. பெற்றோர்களோடு சில மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அலுவலக பணியில் உள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும்.

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதல் உங்களுக்கு மன அமைதி அதிகரிக்கும். மன குழப்பங்கள் தீரும். நீண்ட தூர பயணம் செல்லவேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கும். தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்தால் சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்புள்ளது. சகோதரர்களின் ஆதரவும் அன்பும் இருக்கும். வீட்டை புனரமைத்தல் போன்ற விடயங்களால் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கபோவதற்கான அறிகுறிகள் தென்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் தொடங்கலாம். அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு அலுவலகத்தில் நல்லதொரு அங்கீகாரம் கிடைக்கும்.

மகரம்:
Magaram rasiமகர ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் சற்று குழப்பமாக இருக்கும். எந்த விடயத்திலும் தெளிவான முடிவை எடுப்பதில் சிரமம் இருக்கும் . கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உடல் நலத்திற்கு நல்லது. வீட்டில் பொருள் சேர்க்கை இருக்கும். இந்த மாதம் முழுக்கு உங்களுக்கு பண பிரச்சனை இருக்காது. அனைத்து வழிகளிலும் பணம் வந்து சேரும். சொந்த வீடு மனை போன்றவை சிலர் வாங்குவர். சொத்து விஷயத்தில் இருந்த சிக்கல்கள் மறையும். பிறருக்கு கடன் கொடுக்கையில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரிகளுக்கு அனுகூலமான காலம் இது. அலுவலக பணியில் உள்ளவர்கள் வேலை சம்மந்தமாக வெளியூருக்கோ வெளி நாட்டிற்கோ செல்ல வாய்ப்புண்டு.

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உறவினர்களுக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். தேவை இல்லாத மன குழப்பங்கள் விலகும். சில நேரம் தொலை தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புண்டு. பண பிரச்சனைகள் தீர்ந்து பண புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் நற்பெயர் கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். சுப காரியங்களுக்காக செலவு ஏற்படும். அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் இருக்கும். அதிலும் குறிப்பாக கூட்டு தொழில் புரிவோருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:
Meenam Rasiமீன ராசி நண்பர்களை பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் பல விஷயத்தில் வெற்றி காண்பீர்கள். கடவுள் நம்பிகள் அதிகரிக்கும். குல தெய்வ கோவிலுக்கு செல்வது ஆன்மீக பயணம் மேற்கொள்வது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுவீர்கள். கை நிறைய பணம் வந்து சேரும். இதனால் கடன் பிரச்சனை தீரும். உறவினர்கள் தக்க சமயங்களில் உதவுவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வயிறு சம்மந்தமான பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு. சுப நிகழ்வுகள் சம்மந்தமான பேச்சுக்கள் வீட்டில் அடிபடும். அலுவலக பணியில் உள்ளவர்கள் உடன் பணிபுரிபவர்களின் நம்பிக்கையை பெறுவர்.

மாத ராசி பலன், தின பலன், வார ராசி பலன் என ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

English overview:

Here we predict the April month rasi palan in Tamil. It covers 12 zodiac signs rasi palan for April month. In Tamil monthly horoscope prediction is called as matha palan. So we can say it as April matha rasi palan in tamil.