மற்றவர்களை வசப்படுத்தும் வலிமை கொண்ட ஆரா சக்தியை நமக்குள் அதிகரித்துக்கொள்ள இதை எல்லாம் செய்தால் போதும். வாழ்வின் அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

மனித உடல் மற்றும் இன்னும் பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளைச் சுற்றியும் இருக்கும் ஒளிவட்டம்தான் ஆரா எனப்படும். இது சாதாரண மனிதனுக்கு 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை இருக்கும். ஆனால் சித்தர்கள், ஞானிகள் போன்றவர்களுக்கு இந்த ஆராவானது பல மைல்கள் தாண்டியும் விரிவடைந்திருக்கும். எனவேதான் அவர்கள் அசாதாரணமான மனிதர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஜீவசமாதி அடையவும் ஆரா துணை புரிகிறது. மேலும் அவர்கள் இறந்த பின்னரும் அவர்களுடைய ஆரா நம்மை காப்பாற்றும் என்பது நம்பிக்கை. ஆராவானது சாதாரண மனிதனின் கண்களுக்கு புலப்படுவது அரிதுதான். இப்பிரபஞ்சத்தின் சூட்சம சக்தியானது இந்த ஆராவியினூடகவே நம் உடலில் பாய்ந்துகொண்டிருக்கிறது. ஞான மார்க்கத்தில் அஷ்ட சக்கர சத்தியின் பிரதிபலிப்பு என்கின்றனர். நம்மூளையில் ஒரு பரப்பில் ஏற்படும் மாற்றங்கள் சக்தியை உருவாக்கி நம் உடல் உறுப்புகளின் உதவியால் தூண்டப்பட்டு பரப்பப்படுவதே ஆரா என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நமது உடலில் ஆரா சக்தியானது கண், கை, கால் போன்றவற்றிருந்து அதிகம் வெளியாகிற.து இதனை அடிப்படையாக வைத்தே கண்திருஷ்டி, காலடி மண் எடுத்து வைத்தல், மாந்திரீகம் போன்ற தீய செயல்கள் செய்யப்படுகின்றன.

mantra-thiyanam

இந்த ஆரா சக்தியைக் கண்டறிய நவீன முறையில் பெண்டுலம் என்ற கருவியை உருவாக்கி உள்ளார்கள். இக்கருவியானது சக்தி விரிவடைந்திருக்கும் தூரம் மற்றும் நிறத்தினைக் கண்டறியும். இதனை ஔரா ஸ்கேனர் என்பர். ஆரா சக்திக்கு நிறம் உண்டு, அது சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கும்.

நம் மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களால் ஆரா பலமிழக்கும்போது நம் உடலில் தீய மற்றும் அழுக்கடைந்த சக்திகள் தேங்கும். எனவே நம் ஆராவை சுத்தமாகவும், வலுவானதாகவும் வைத்திருப்பது முக்கியமான ஒன்றாகும்.

kathir

ஆரா சக்தியின் பயன்கள்:
ஆரா சக்தியானது நமது உடல், மனம் மற்றும் உணர்வுகளைப் பாதுப்பாக வைத்துக்கொள்ளப் பயன்படுகிறது. ஆரா சக்தியானது இப்பிரபஞ்சத்தில் உள்ள அதியுயர் சக்திகளை ஈர்க்கும் வல்லமை உடையது. ஒருவர் தன் ஆராவின் பலத்தை அதிகப்படுத்துவதன் மூலம் மற்றவரின் ஆராவின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

முறையாக பயிற்ச்சிப்பெற்று ஆராவை கட்டுப்படுத்த தெரிந்தவர்கள் அதன் மூலம் மற்றவர்களின் நோய்களை குணப்படுத்துகிறார்கள். ஆராவை அதிகப்படுத்துவதால் அவரின் அழகு கூடும் முகமும் எந்த வித குழப்பமும் இல்லாமல் தெளிவாக காணப்படும். நம்முடைய ஆராவானது நமது உடலைச்சுற்றி ஒரு பாதுகாப்பு கவசம்போல் இருக்கிறது. மேலும் நமது ராஜ உறுப்புகளான கணையம், சிறுநீரகம், மூளை, இதயம் ஆகியவற்றையும் சேர்த்து மனநல உணர்வுகளையும் நேர்விசை சக்தியாக தூண்டி நமது உடலைப் பாதுகாக்கிறது.

thiyanam-mantra

ஆரா பலமிழக்கும்போது என்ன நடக்கும்?
நீங்கள் நோய்வாயப்படும்போதும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் எதிர்மறையான சிந்தனைகளை உங்களுக்குள் செலுத்தும்போதும் உங்களுடைய ஆரா பலமிழக்கிறது. இப்படியான சூழ்நிலைகளில் நீங்கள் மன அழுத்தம், எரிச்சலுணர்வு, பதட்டம், பொறுமையிழப்பு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். இதனால் உங்களுக்கு பலவிதமான துன்பங்கள் வாழ்க்கையில் வந்து சேரும்.

Thiyanam

ஆராவை சுத்தம் செய்தல் மற்றும் பலமிக்கதாக மாற்றும் முறை:
எண்ணெய் மற்றும் மூலிகைக் குளியல்கள் உங்கள் ஆராவை சுத்தம் செய்ய சிறந்த வழிமுறையாகும். கேரளாவில் மூலிகை குளியல் என்பது பிரசித்து பெற்ற ஒன்றாகும். எண்ணெய் மூலிகை குளியலை செய்ய இயலாதவர்கள், நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிது உப்பு, பன்னீர், ரோஜா இதழ்கள் இதனைக் கலந்து குளிக்கலாம்.

bucket

பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் குளிப்பதும் ஆராவை சுத்தம் செய்வதற்கான வழியாகும். இதனை செய்யும்போது நம்மில் இருக்கும் தீய சக்திகள் நம்மை விட்டு விலக வேண்டும் என்ற மனநிலையிலேயே செய்ய வேண்டும். இதனை நாள்தோறும் செய்யலாம், அப்படி செய்யும்போது நம்மில் மாற்றம் ஏற்படுவதை நாம் கண்கூடாக உணரலாம்.

கிணற்று நீர் மற்றும் ஓடுகின்ற ஆற்றுநீரில் குளிப்பதால் ஆரா சுத்தமாகிறது. அதிகாலையில் எழுந்தவுடன் சுத்தமான குளம் அல்லது ஏதேனும் நீர்நிலையில் குளிக்கலாம். இடி, மின்னல் ஏதும் இல்லாத மழையில் சிறிது நேரம் நடப்பாதாலும் ஆரா சுத்தமாகிறது.

Rain

களிமண்ணை நன்கு காய வைத்து அதனை மென்மையாக பொடிசெய்து, அந்தப் பொடியை உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்கலாம். வெட்டிவேர், சந்தன மரத்துண்டு, கற்பூரவள்ளி போன்ற வாசம் தரும் தாவரங்களின் இலை அல்லது காய்ந்த குச்சிகளைக் கொண்டு புகை உருவாக்கி அந்தப் புகையை உடல் முழுவதும் பரவச் செய்வதாலும் ஆரா சுத்தமாகிறது.

முடிந்தவரை எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வதை நிறுத்திக் கொண்டு நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்கள் ஆராவை பலமிக்கதாக வைத்துக்கொள்ளும்.