குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கும் ‘அரகஜா’ வேறு எந்த தெய்வங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்!

kala-bairavar-aragaja
- Advertisement -

தெய்வீக மூலிகை பொருட்களில் ‘அரகஜா’ மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த அரகஜா நாட்டு மருந்து அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் சாதாரணமாகவே கிடைக்கப் பெறுகிறது. இதன் விலையும் மிகவும் மலிவு தான், 50 ரூபாய் கூட இருக்காது. ஆனால் இதனுடைய பலன்கள் மிகவும் மகத்துவமானதாக நம்பப்பட்டு வருகிறது. அரகஜா பயன்படுத்தி நம் குலதெய்வத்தை அழைக்க முடியும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அரகஜா வேறு எந்த தெய்வங்களுக்கு பயன்படுத்த முடியும்? இதனுடைய அற்புதங்கள் என்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

கோவில்களில் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படும் இந்த அரகஜா வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வாங்கும் பொழுது நாலைந்து டப்பாக்களாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒன்று உங்களுடைய தனிப்பட்ட தேவைக்கும், இன்னொன்று பூஜை அறைக்கு தனியாக வைத்து பயன்படுத்த வேண்டும். மீதியை கோவில்களுக்கு தானம் செய்ய பயன்படும். அரகஜா நெற்றியில் இட்டுக் கொள்வதால் நம்முடைய சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. எந்த ஒரு காரியத்திலும் வெற்றி கிடைக்க அரகஜா நெற்றியில் இட்டுக் கொண்டு செல்லலாம்.

- Advertisement -

கோவில்களில் அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுக்கும் பொழுது அரகஜா சேர்த்து வாங்கிக் கொடுப்பது கூடுதல் பலன்களை கொடுக்கும். அரகஜாவை வைத்து குலதெய்வத்தை எப்படி வீட்டிற்கு வரவழைக்க வேண்டும் தெரியுமா? மிக மிக எளிமையான முறையில் நம்முடைய குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்க முடியும்.

kuladheivam

நல்ல நாளில் வீட்டை சுத்தம் செய்து கொண்டு, பூஜை அறையில் ஒரு பித்தளை அல்லது செம்பு சொம்பில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பிக் கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சளுடன் அரகஜாவை குழைத்து பொட்டு வைக்க வேண்டும். அதன் பின் நைவேத்தியம் படைத்து, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டால் குலதெய்வம் அந்த தண்ணீரில் நிச்சயமாக வந்து விடுவார் என்பது ஐதீகம். குலதெய்வம் தெரியாதவர்கள் அரகஜா பயன்படுத்தி குலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கலாம்.

- Advertisement -

மேலும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் கட்டாயம் அரகஜா இடம் பெறுகிறது. அதே போல கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில், ராகு கால வேளைகளில் அரகஜா பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. ஒன்பது வியாழக்கிழமை, காலை 9 மணி முதல் 10.30 குள்ளாக காலபைரவருக்கு பூஜைக்காக வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூ, பழத்துடன் சேர்த்து இந்த அரகஜா வாங்கிக் கொடுத்து வந்தால் வருமான தடை நீங்கும். வேலை இல்லாதவர்கள், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, மனதிற்கு பிடித்த வேலை அமையும். தொழில், வியாபாரம் சூடுபிடிக்க துவங்கும்.

kala-bairavar

வீட்டில் சாமி படங்களுக்கு மஞ்சள், குங்குமம் வைக்கும் பொழுது, மஞ்சளுடன் சேர்த்து அரகஜாவை குழைத்து வைப்பது விசேஷமானது. குறிப்பாக மகாலட்சுமி படத்திற்கு இது போல் செய்து வைப்பது செல்வத்தை அதிகரிக்க செய்யும். வாசனை மிக்க அரகஜா பயன்படுத்தும் பொழுது வீடு கோவில் போன்ற வாசனையைக் கொடுக்கும். இதனால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்குவாள் என்பது நம்பிக்கை. பெண் பார்க்க செல்பவர்கள், நேர்காணலுக்கு செல்பவர்கள், வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள் வீட்டை விட்டு கிளம்பும் முன் அரகஜாவை நெற்றியில் வைத்துக் கொண்டு சென்றால் நிச்சயமாக ஜெயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே
காற்றில் கரையும் கற்பூரம் போல, உங்களது கடனும் காற்றோடு காற்றாக கரைந்து போக, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -