காற்றில் கரையும் கற்பூரம் போல, உங்களது கடனும் காற்றோடு காற்றாக கரைந்து போக, இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

kadan

எந்த ஒரு பொருளை எரித்து முடித்த பின்பும் அந்தப் பொருளை எரித்ததற்கான சாம்பல் கட்டாயம் மிச்சமிருக்கும். ஆனால், கற்பூரத்தை எரித்தால் மட்டும் கற்பூரம் மிச்சம் இருக்காது. நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களும் கற்பூரம் போல் காற்றோடு காற்றாக கரைய வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக தான், இறைவனிடம் கற்பூரத்தை கொளுத்தி வேண்டுதலையும் வைக்கின்றோம். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். கடன் பிரச்சனை தீர்வதற்கு நிறைய பரிகாரங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், அந்த வரிசையில் இந்த பரிகாரம் மிக மிக சுலபமானது. மிக மிக சக்தி வாய்ந்தது.

kadan-prachani

உங்களுடைய ஜாதக கட்டத்தில் நீங்கள் கடனாளியாக தான் இருக்கவேண்டும் என்ற அமைப்பு இருந்தாலும் சரி, அந்த அமைப்பை அந்த பாதிப்பை, கொஞ்சமாவது குறைப்பதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு கை கொடுக்கும். தேவையில்லாத விஷயங்களுக்கு, ஆடம்பர செலவுக்காக, நீங்களே போய் கடன் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருந்தால் அந்த பிரச்சனையிலிருந்து, வெளிவர கூட நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பச்சை கற்பூரம் உங்களுக்கு பல வடிவங்களில் கிடைக்கும். கொஞ்சம் நீளவாக்கில் இருக்கும் பச்சை கற்பூரமாக பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பென்சிலை எடுத்துக் கொள்ள வேண்டும். பென்சிலின் மூலம் அந்த பச்சை கற்பூரத்தின் மேல் நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ, அந்த நபரின் பெயரை எழுதி பூஜையில் எங்காவது ஒரு இடத்தில், ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு வைத்து விடுங்கள். அந்த கற்பூரத்தை எந்தப் பொருளாலும் மூட வேண்டாம்.

pachai-karpooram2

ஒரு சில நாட்களில் அந்த கற்பூரம் கரைய தொடங்க ஆரம்பிக்கும். அப்படி கற்பூரம் கரைய கரைய உங்களது கடனும் கரையும் என்பது தான் நம்பிக்கை. ஆனால், இந்த கற்பூரத்தில் பெயரை எழுதி வைத்துவிட்டு கடன் தானாக குறைந்து விடும் என்று நீங்கள் சும்மாவே இருக்க கூடாது. கடனை அடைப்பதற்கு என்ன முயற்சிகளை எல்லாம் எடுக்க முடியுமோ, அந்த முயற்சிகளை கை விடாமல் எடுக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக பணத்தினை சேமித்து கடனை அடைக்க முழு முயற்சியில் ஈடுபடவேண்டும். பரிகாரம் உங்களுக்கு துணையாக நிற்கும்.

- Advertisement -

இதோடு சேர்த்து உங்களுடைய வீட்டில், உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே, தொடர்ந்து 48 நாட்கள் ஒரு சிறிய மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, சிகப்பு நிற திரி போட்டு, அந்த நல்லெண்ணெய் உள்ளே 2 கொள்ளு போட்டு தீபம் ஏற்றவேண்டும். கொள்ளை தினம் தோறும் மாற்ற வேண்டும். திரியையும் தினம்தோறும் மாற்ற வேண்டும்.

Kollu

தொடர்ந்து இந்த தீபம் உங்களுடைய வீட்டில் ஒளிர ஒளிர உங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை முழுவதும் உங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று விடும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் முழு பலனை உங்களால் அடைய முடியும். முடிந்தவரை பழைய கடன் பாக்கியை அடைப்பதற்கு முன்பாக, புதிய கடனை வாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கையில்தான் உள்ளது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தானாக சுற்றும் இந்த அதிசய புல் பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் தொழில் விருத்தி, பண விருத்தி பன்மடங்கு அதிகரிக்கும் தெரியுமா? இது எங்கே கிடைக்கும்? இதன் தத்துவம் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.