5 அரச இலை இருந்தால் போதும்! நீங்கள் நினைத்தது 21 வாரத்திற்குள் நினைத்தபடி அப்படியே நடக்கும்.

arasa-ilai-pillaiyar

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். நம்முடைய வேண்டுதல்களை பிரார்த்தனையாக கடவுளிடத்தில் வைப்பதுண்டு. ஆனால் அவைகள் எல்லாம் நிறைவேறும் என்பது நம் கையில் இல்லை. நம்முடைய பிரார்த்தனைகள் நிறைவேற எளிய பரிகாரங்கள் செய்து வரலாம். அதில் முழு முதற்கடவுளான விநாயகரை வேண்டி அரச இலைகள் வைத்து செய்யும் பரிகாரம் மிகுந்த சக்தி வாய்ந்தவை. தீராத வினைகளை எல்லாம் விக்கினங்கள் தீர்க்கும் விநாயகப் பெருமான் தீர்த்து வைப்பார். இந்த பரிகாரத்தை எப்படி முறையாக செய்ய வேண்டும்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

arasa-ilai

அரச மரத்தில் விநாயகப் பெருமான் காட்சி தருவதாக ஐதீகம் உள்ளது. அரச மரத்தடியில் பிள்ளையாரைச் சுற்றி வணங்கினால் நினைத்தது எல்லாம் நடக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். அத்தகைய அரச மர இலையை காலையில் சென்று ஐந்து இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். காலையிலேயே பறித்துக் கொண்டு வந்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அன்று செய்வது விசேஷமானது.

ஐந்து அரச மர இலையில் மஞ்சள் தடவி கொள்ளுங்கள். இதனால் அரச மர இலையில் இருக்கும் சக்தி கூடுதலாகும். தோஷ நிவர்த்தி செய்ததாக அர்த்தமாகும். அதன் பின் ஒவ்வொரு இலையிலும் சந்தனத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு இலையின் மேல் ஒவ்வொரு இலையாக வைத்து ஒரே இலையாக வையுங்கள். இதை பூஜை அறையில் விநாயகர் முன்பு செய்ய வேண்டிய பரிகாரம் ஆகும்.

manjal-kizhangu

அந்த இலையின் மேல் ஒரே ஒரு குண்டு மஞ்சள் வைத்து, ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள். அதை அப்படியே சுருட்டி மடித்து மஞ்சள் தடவிய நூலால் கட்டிக் கொள்ள வேண்டும். இப்போது செம்பு பாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் பித்தளை பாத்திரமாக இருந்தாலும் சரி. எச்சில் படாத ஏதாவது ஒரு டம்ளர் கூட எடுத்துக் கொள்ளலாம். அதில் நிரம்ப பச்சரிசியை போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் மீது இப்போது முடிந்து வைத்திருக்கும் இந்த அரசமர இலை முடிப்பை வைக்க வேண்டும். அரிசியில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுக் கொள்ளுங்கள். இது பரிகாரத்திற்காக செய்யப்படும் கலசம் போன்றது ஆகும். இதை விநாயகர் முன்பு வைத்து கீழ்வரும் மூல மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் உச்சரிக்கும் பொழுது குங்குமத்தால் அந்த கலசத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

kungumam

விநாயகர் மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே
வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா

arasa-mara-pillaiyar

இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 வாரங்கள் செய்ய வேண்டும். மனதில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நினைத்து பிரார்த்தனையாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த 21 வாரத்திற்குள் பெண்களாக இருப்பின் தீட்டு நேரங்களை தவிர்த்து மற்ற கிழமையில் அந்த வாரத்தில் செய்து கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. நவக்கிரக தோஷம் நீங்கவும், நம்முடைய வேண்டுதல்களை வேண்டியபடி உடனே நிறைவேறவும் பிள்ளையார் இடத்தில் நாம் பக்தியுடன் செய்யக்கூடிய ஒரு பரிகார முறை தான் அரச இலை பரிகாரம்.

இதை 21 வாரம் முறையாக கடைபிடிப்பவர்களுக்கு நினைத்தது நினைத்தபடி நடந்து வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். இதை இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும்? என்ற வரையறை இல்லை. நாம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் நாம் செய்யும் நேரம் ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் இல்லாதவாறு மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். இதைத் தவிர மற்ற நேரத்தில் வெள்ளி அல்லது சனி அன்று எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்.

arasa-ilai

மிகவும் எளிய பரிகாரம் தான். ஆனால் அரச இலைக்கு நம்முடைய வேண்டுதல்களை இறைவனிடத்தில் நேரடியாக கொண்டு போய் சேர்க்கும் சக்தி உண்டு. ஒவ்வொரு வாரமும் புதிதாக ஐந்து அரச இலைகளை எடுத்து வருவது முக்கியமானது. நாணயங்களை மஞ்சள் துணியில் முடிந்து பரிகாரம் முடிந்தவுடன் விநாயகர் கோவிலுக்கு சென்று காணிக்கை செலுத்தி விடுங்கள். மஞ்சள் கிழங்குகளை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அரச இலைகளை மட்டும் புதிதாக மாற்றி விடுங்கள். கலசத்தில் இருக்கும் அரிசி அப்படியே இருக்கலாம். 21 வாரங்கள் நிரம்பியதும் அரிசியை பறவைகளுக்கு உணவாக கொடுத்து விடுங்கள். எத்தகைய வேண்டுதல் ஆனாலும் சரி 21 வாரத்திற்குள் நிச்சயம் நடந்தே தீரும் என்பது மட்டும் உறுதி. பிள்ளையாரின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தால் நிச்சயம் பலன் பெறலாம்.

இதையும் படிக்கலாமே
22/8/2020 அன்று மிக எளிமையான முறையில் ‘விநாயகர் சதுர்த்தி’ விரதத்தை இப்படியும் மேற்கொள்ளலாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.