இந்த மந்திரத்தை சொல்லி இந்த மரத்தை மட்டும் வலம் வந்தால் கேட்டதெல்லாம் கிடைக்குமா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

arasa-maram-vinayagar

விருட்சத்திற்கு தெய்வ சக்தி இருப்பதாக புராணங்களில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. விருட்சத்தை கடவுளாக பார்ப்பவர்களும் நம் நாட்டில் இருக்கத் தான் செய்கிறார்கள். ஆன்மீக ரீதியாக குறிப்பிட்ட விருட்சங்கள் அதாவது மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. அவ்வகையில் ஆலமரம், அரசமரம், வில்வமரம், வேப்பமரம் ஆகிய மரங்கள் முதலிடத்தில் இருக்கின்றன. இது போன்ற மரங்கள் அதீத சக்தி கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. இதில் அரசமரம் கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுக்கும் அட்சய மரமாகவே சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மரத்தை வலம் வரும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? இப்படி வலம் வருவதால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

arasa-ilai

அரச மரத்தை வலம் வந்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். இதற்கு அறிவியல் ரீதியான காரணங்களும் உண்டு. அரசமரத்தை வலம் வரும் பெண்களுக்கு அதிலிருந்து வரும் சுத்தமான காற்றானது உடலுக்குள் சென்று நன்மைகளை அளிக்கிறது. அரசமரப் பிள்ளையாரை நினைத்து வழிபடுவதால் கர்ப்பம் உண்டாகும் என்பது தெய்வீக நம்பிக்கையாக இதுவரை தொடர்ந்து நம்மிடத்தில் இருந்து வருகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அரசமரத்தை வலம் வரும் பொழுது கூற வேண்டிய மந்திரம் இதோ உங்களுக்காக!

ஸ்லோகம்:
மூலதோ பிரம்மரூபாய!
மத்யதோ விஷ்ணு ரூபினே!
அக்ரத: சிவ ரூபாய!
விருக்ஷ ராஜயதே! நம:

om-mantra

அரசமரத்தை வலம் வரும் பொழுது இந்த ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டே 108 முறை வலம் வர வேண்டும். 108 முறை அரசமரத்தை வலம் வருபவர்களுக்கு தீராத நோய்கள் எல்லாம் தீரும். ஆசைப்பட்ட விஷயங்களெல்லாம் நடைபெறும் என்பது நம்பிக்கை. அதிகாலையில் அரசமரத்தை வலம் வருவது விசேஷ பலன்களை கொடுக்கும். அதிலும் குறிப்பாக திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று இந்த பரிகாரத்தை செய்தால் கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரார்த்தனைகள் இருக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத விஷயங்கள் கூட அரச மரத்தை வலம் வந்தால் நிறைவேறுவதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அரச மரத்திற்கு இவ்வளவு சக்தியா? என்று ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. அரச மரத்திற்கு இருக்கும் தெய்வீக சக்தியை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதனால் தான் பிள்ளையாரை அரச மரத்தின் அடியில் வைத்து வணங்கினார்கள் நம் முன்னோர்கள். நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் நிச்சயம் அறிவு பூர்வமான காரணங்கள் இருக்கிறது என்பதை இதன் மூலம் நம்மால் உணர முடிகிறது.

praying god

அரசமரத்தை வலம் வர நினைப்பவர்கள் அந்த மரத்திற்கு நிவேதனமாக உங்களால் முடிந்த பூஜை பொருட்கள் அல்லது பழங்களை படைக்கலாம். மஞ்சள், குங்குமம், விபூதி போன்ற மங்கலப் பொருட்களையும், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் போன்ற மங்கல தாம்பூலத்தையும் கூட அரச மரத்திற்கு படைத்து வழிபடலாம். சந்திர பகவானுக்கு உரிய திங்கள்கிழமை அன்று அரச மரத்தை வலம் வருவது கேட்டதெல்லாம் பெறுவதற்கு உரிய காலம் ஆகும். இதிலும் அமாவாசை அன்று செய்தால் சிறந்ததாக கூறப்படுகிறது. இந்த பரிகாரத்தை செய்வதால் மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேறும். பிரார்த்தனைகள் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை. நீங்களும் செய்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
எலுமிச்சை பழத்தை கொண்டு உங்களுடைய வீட்டில் இந்த 1 தவறை மட்டும் செய்யாதீர்கள்! உங்களுடைய சந்ததியினரை கஷ்டத்தில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.