எலுமிச்சை பழத்தை கொண்டு உங்களுடைய வீட்டில் இந்த 1 தவறை மட்டும் செய்யாதீர்கள்! உங்களுடைய சந்ததியினரை கஷ்டத்தில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.

sad-lemon
- Advertisement -

எலுமிச்சை பழம் தேவ கனி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நமக்கு இருக்கக்கூடிய கண் திருஷ்டியைக் கழிப்பதிலிருந்து, இறை அம்சத்தை நம் வீட்டில் நிலை நிறுத்தும் வரை, இந்த எலுமிச்சை பழத்தை நாம் பயன்படுத்துகின்றோம். இறை அம்சம் பொருந்திய இந்த எலுமிச்சை பழத்தின் மூலம் நமக்கு பல நன்மைகள் உண்டு. ஆனால் அதே எலுமிச்சை பழத்தின் மூலம் நமக்கு பலவிதமான பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சுலபமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் இந்த எலுமிச்சை பழத்தை நாம் எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்படி பயன்படுத்தக்கூடாது என்பதைப் பற்றிய தெளிவான விளக்கத்தைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

lemon1

ஒரு எலுமிச்சை பழம் ஒரு குடும்பத்தையும் ஒரு வம்சத்தையும் வாழவும் வைக்கும், அதே எலுமிச்சம்பழம் அந்தக் குடும்பத்தையும் அந்த வம்சத்தையும் அழிக்கவும் செய்யும் என்று சொல்கிறது சாஸ்திரம். பொதுவாகவே எந்த ஒரு சக்தியையும் தன் மேல் கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதுதான் எலுமிச்சை பழம். அதற்கு நல்ல சக்தி கெட்ட சக்தி என்பது கிடையாது. அந்த பழம் யார் கையில் இருக்கிறதோ அவர்களுடைய எண்ணம் எப்படி இருக்கின்றதோ, அந்த எண்ணத்தை அந்த எலுமிச்சை பழம் கிரகித்துக் கொள்ளும்.

- Advertisement -

நல்ல எண்ணம் கொண்டவர்கள், நேர்மறை ஆற்றல் கொண்டவர்களுடைய கையில் இருந்து பெறப்படும் எலுமிச்சை பழத்தால் நமக்கு நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதுவே, நமக்கு கெடுதல் நினைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நம்முடைய முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப்படுகிறார்கள் எனும் பட்சத்தில், அவர்களிடமிருந்து நாம் ஒரு எலுமிச்சை பழத்தை வாங்கி விட்டோம் என்றால், அது நம்முடைய வம்சத்தை அழிக்கும் அளவிற்கு கூட விபரீத முடிவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

temple-lemon

இந்தப்பதிவு யாரையும் பயப்பட வைக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படவில்லை. கோவிலிலிருந்து, குருக்கள் கையில் இருந்து பெறப்படும் எலுமிச்சை பழத்தை மட்டும் தான் கொண்டு வந்து நம் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். இரண்டாவதாக உங்களுக்கு தெரிந்த ஞானிகள் மகான்கள், குருமார்கள், இப்படிப்பட்டவர்கள் கையிலிருந்து எலுமிச்சை பழத்தை வாங்கி நம் வீட்டிலோ நம் வீட்டு பூஜை அறையிலோ வைத்துக்கொள்ளலாம். தவிர, உங்களுக்கு நெருங்கியவர்கள் என்ற முறையிலோ, நண்பர்கள் என்ற முறையிலோ யாராவது எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் அல்லது உங்கள் வீட்டில் வையுங்கள் என்று சொன்னால், முடிந்தவரை அதை உங்களது கையில் வாங்காமல் இருப்பது தான் நல்லது.

- Advertisement -

சில இடங்களில் கடைக்குச் சென்று எலுமிச்சை பழத்தை வாங்கும் போது கூட, கடையில் எலுமிச்சை பழத்தை விற்பவர்கள், தன் கையால் எடுத்து எலுமிச்சை பழத்தை கொடுக்கமாட்டார்கள். ஒரு கூடையில் போட்டு வைத்துவிட்டு, உங்களுக்கு தேவையான எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறுவார்கள். சில இடங்களில் நீங்கள் உற்று கவனித்தால் உங்களுக்கே இது புரியும். விவரம் தெரிந்தவர்கள் தங்களுடைய கையால் எலுமிச்சம்பழத்தை கொடுக்கவும் மாட்டார்கள். எலுமிச்சம்பழத்தை வாங்கவும் மாட்டார்கள். இனிவரும் காலங்களில் நீங்களே சோதித்து பாருங்கள்.

lemon

உறவுகளை நம்பக்கூடாது, நண்பர்களை நம்ப கூடாது என்பதற்காக சொல்லப்படும் விஷயம் அல்ல இது. இருப்பினும் உங்களுடைய முன்னேற்றம் தடைபட வேண்டும் என்பதற்காக, உங்களுடைய வாழ்வின் மேல் பொறாமைப் பட்டு, உங்கள் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காகவும், உங்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும், அடுத்தவர்களால் பில்லி சூனியம் போன்ற பெரிய பெரிய எதிர்மறை ஆற்றல்களை தான் ஏவி விட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. மந்திரிக்கப்பட்ட ஒரு எலுமிச்சை பழம் உங்களுடைய வாழ்க்கையை அதல பாதாளத்திற்கு தள்ளிவிடும். ஆகவே, எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக, இப்படிப்பட்ட விஷயங்களை எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள பதிவு இது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
தெரியாமல் கூட யாரிடமும் கேட்கக்கூடாத 4 கேள்விகள் என்ன தெரியுமா? கேட்டால் அப்புறம் அவ்வளவு தான்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -