வாழ்க்கையில் என்னால் ஒரு அடியை கூட மேலே எடுத்து வைக்க முடியவில்லை. எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் ஒரு சரிவு. அதில் ஒரு பின்னடைவு. பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சனையை இந்த பிரபஞ்சம் எனக்கு மட்டும் கொடுத்துக் கொண்டே இருக்கிறது என்பவர்கள், தவறாமல் எளிமையான இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு தேவையானது எதுவோ அது தானாக உங்கள் கையை வந்து சேரும்.
சனிக்கிழமை அரசமர பரிகாரம்
சனிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். சூரிய பகவானின் ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்க வீட்டு பக்கத்தில் அரசமரம் எங்கே இருக்கிறது என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். நிறைய பிள்ளையார் கோவிலில் அரசமரம் இருக்கும் அல்லது அரச மரத்தடியில் பிள்ளையார் இருப்பார். எப்படி இருந்தாலும் சரி அந்த அரச மரம் உங்களுக்கு தேவை.
போய் அரச மரத்தை தொடக்கூடாது. அரச மரத்தை 27 முறை வலம் வர வேண்டும். மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். எந்த வேண்டுதலையும் இறைவனிடம் கேட்க வேண்டாம். குலதெய்வத்தை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டு, குலதெய்வத்தின் நாமத்தை மட்டும் சொல்லி அந்த அரச மரத்தை 27 முறை வலம் வரவேண்டும்.
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை மூன்று சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்தாலே உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் உடையும். எதுவுமே எனக்கு சரியாக நடக்கவில்லை எதுவுமே வாழ்க்கையில் எனக்கு நிலையாக தங்கவில்லை என்று கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்த பின்பு உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் மாற்றத்தை நிச்சயம் கண்கூடாக பார்ப்பீர்கள்.
நவகிரகங்களின் ஒட்டுமொத்த சக்தியையும் ஈர்க்கக்கூடிய பவர் இந்த அரச மரத்திற்கு இருக்கிறது. அது அவ்வளவு சாதாரணமான மரம் கிடையாது. அந்த காலத்தில் அதனால் தான் அந்த மரத்தை நம்முடைய முன்னோர்கள் கோவில்களில் வளர்த்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று சனிக்கிழமை தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்தால் வாழ்க்கையில் நீங்கள் ஜெய்த்து விடலாம்.
இதை நிறைய பேரால் நம்ப முடியாது. நீங்க நம்புறீங்களோ இல்லையோ மேலே சொன்ன முறைப்படி அரச மரத்தை போய் சுத்திட்டு வாங்க. நிச்சயம் உங்கள் வாழ்க்கை அன்றிலிருந்து தலைகீழாக மாறிவிடும். முடிந்தால் கூடவே சனிக்கிழமை இந்த மரத்தை சுற்றச் செல்லும் போது உங்களுடைய கைகளில் கொஞ்சம் பச்சரிசி மாவும் வெல்லமும் சேர்த்து எடுத்துச் செல்லுங்கள் அந்த மரத்தை சுற்றி தூவி விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: செல்வம் சேர குபேர பூஜை
அங்கு வரும் ஈ எறும்புகள் அதை சாப்பிடும். பல்லாயிரம் உயிர்களுக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும். நல்லது என்று சொல்லும் விஷயங்களை ஆராய்ச்சி செய்யாதீங்க கஷ்டம் என்று வரும்போது கஷ்டப்படாமல் இந்த விஷயங்களை பின்பற்றினால் உங்களுக்கு நல்லதை மட்டுமே கடவுள் நடத்திக் கொடுப்பார் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.