இந்த வார்த்தையை ஒருமுறை சொல்லிப் பாருங்கள். அரசாங்க வேலையில் இருந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் உங்கள் வீடு தேடி வரும். நாலு பேரு மதிக்கும் அளவுக்கு கை நிறைய சம்பாதிக்கலாம்.

job
- Advertisement -

கால் காசு வருமானமாக இருந்தாலும், அது அரசாங்க உத்தியோகமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஒரு சில வருடங்களுக்கு முன்பு பலபேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சில பேருக்கு அது வாழ்க்கையில் ஒரு லட்சியமாகவே இருக்கும். இப்போது காலம் கொஞ்சம் மாறிவிட்டது. அரசாங்க உத்தியோகத்தை விட நிறைய சம்பளத்தை தரக்கூடிய நிறைய வேலை வாய்ப்புகள் நமக்கு கிடைக்கிறது. இருப்பினும் இன்னும் சில பேர் எனக்கு அரசாங்க வேலை தான் தேவை என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக அரசாங்க வேலை சீக்கிரம் கிடைக்கும்.

அப்படி அரசாங்க வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தால் கூட, கை நிறைய பணம் சம்பாதிக்கும் அளவுக்கு கௌரவமான ஒரு வேலையை தரக்கூடிய சக்தி வாய்ந்த எளிமையான பரிகாரம் தான் இது. ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். 48 நாளில் அப்பாயின்மென்ட் ஆர்டர் உங்கள் வீடு தேடி வரும்.

- Advertisement -

அரசாங்க வேலை கிடைக்க எழுத வேண்டிய ஸ்விட்ச் வேர்ட்:
இந்த பிரபஞ்சத்தோடு இணையக்கூடிய சில வார்த்தைகளை ஒன்றாக சேர்த்து சுவிட்ச் வேர்ட் என்று சொல்லுவாங்க. அந்த குறிப்பிட்ட வார்த்தையை நாம் அடிக்கடி உச்சரிக்கும் போது, நமக்கு உண்டான பிரச்சனைகள் தீரும். (ஒவ்வொரு பிரச்சனைக்கு ஒவ்வொரு வார்த்தைகள் இருக்கும்.) அதில் அரசாங்க வேலை கிடைக்க ஒரு சுவிட்ச் வேர்டை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இது ஒரு மேஜிக் வேர்ட். இந்த வார்த்தையை மனப்பூர்வமாக சொல்லும்போது நமக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, மனப்பூர்வமாக இந்த வார்த்தையை சொல்ல வேண்டும். அந்த வார்த்தை என்ன. அந்த வார்த்தையை எப்படி பிரயோகிப்பது.

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்வழிக்க வேண்டும். சுத்த பத்தமாக இருக்கும் பட்சத்தில் முகம் கை கால்களை கழுவிக்கொண்டு, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு கோடு போட்ட நோட்டு அல்லது கோடு போடாத நோட்டு எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நீல நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நோட்டின் முதல் பக்கத்தில், இந்த பரிகாரத்தை தொடங்கக்கூடிய முதல் நாள் ‘நல்ல அரசாங்க வேலை கிடைக்க வேண்டும்’ என்று எழுதிக் கொள்ளுங்கள். அல்லது உங்களுக்கு எந்த வேலை கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறதோ அந்த வேலை கிடைக்க வேண்டும் என்றும் எழுதிக் கொள்ளலாம். அடுத்தடுத்த பக்கத்தில் பின் சொல்லக்கூடிய இந்த ஒரு வார்த்தையை எழுத வேண்டும். ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும். கேப்பிட்டல் லெட்டரில் தான் எழுத வேண்டும்.

- Advertisement -

‘DIVINE BRING COUNT NOW’ இதுதாங்க அந்த வார்த்தை. ஒரு நாளைக்கு 27 முறை இந்த வார்த்தையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வைத்திருக்கும் அந்த நோட்டு புத்தகத்தில் எழுத வேண்டும். அவ்வளவு தான். இதை எழுதி முடித்த பின்பு நீங்கள் நினைக்கும் அந்த வேலை உங்களுக்கு கிடைக்க வேண்டும். உங்கள் கைக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது என்று, பாசிட்டிவாக நினைத்து வெறும் ஐந்து நிமிடங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தியானத்தில் இருக்க வேண்டும். அவ்வளவு தான். திரும்ப நீங்கள் தூங்க செல்லலாம். தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: தீராத நோய்களும் தீர இந்த ஒரு பொருளை தொப்புளில் வையுங்கள்! நோய் தீர வணங்க வேண்டிய தெய்வம் என்ன!

காலையில் 5 மணிக்கு முன்பாக இந்த விஷயத்தை எல்லாம் நீங்கள் செய்திருக்க வேண்டும். அதிகாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் இருக்கக்கூடிய நேரத்தை இதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்வது மிக மிக சிறப்பான பலனை கொடுக்கும். தொடர்ந்து 48 நாட்கள் இதை பின்பற்றி வரும்போது, உங்களுக்கான வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். ஒருவேளை உங்களுக்கு வேலை கிடைப்பதில் இன்னும் சிரமம் இருக்கிறது என்றால் என்ன செய்வது. மீண்டும் தொடர்ந்து இந்த ஸ்விட்ச் வேர்டை எழுதி வாருங்கள். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் அரசாங்க வேலை கிடைக்கும். இல்லை என்றாலும், உங்கள் மனதிற்கு பிடித்தபடி வேறு ஒரு நல்ல வேலை நிச்சயம் கிடைக்கும். நம்பிக்கைதாங்க வாழ்க்கை.

- Advertisement -