என்னுடைய ஜாதக கட்டத்தில் நான் அரசாங்க வேலைக்கு செல்ல வாய்ப்பே இல்லை. ஆனால் எனக்கு அரசாங்க உத்தியோகம் தான் வேண்டும் என்று ஒற்றை காலில் நிற்பவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். தேர்வு எழுதி முயற்சி செய்தும் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்க வேலை உடனடியாக கிடைக்க வேண்டும் என்றால், என்ன பரிகாரம் செய்வது.
எனக்கு ஜாதக கட்டத்தில் அரசாங்க வேலை கிடைப்பதற்கு உண்டான அத்தனை அம்சமும் இருக்கிறது. நானும் தேர்வு எழுதுகிறேன், வேலை கிடைப்பது போல தெரிகிறது. ஆனால் கடைசி நேரத்தில் வேலை கைவிட்டு போகிறது. இப்படிப்பட்ட எங்களுக்கும் ஒரு நல்ல வேலைக்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நாங்கள் என்ன செய்வது? ஆக மொத்தத்தில் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். ஆன்மீகம் சார்ந்த, கொஞ்சம் சிரமப்பட்டு செய்ய வேண்டிய பரிகாரம் இதோ உங்களுக்காக இந்த பதிவில்.
பரிகாரம் என்றால் எளிய பரிகாரம் என்று தான் சொல்லுவார்கள். இது என்ன சிரமத்தோடு செய்ய வேண்டிய பரிகாரம். வேண்டுதல் பெருசாக இருக்கும்போது, பரிகாரமும் கொஞ்சம் பெருசாக தான் இருக்கும். சிவன் கோவிலுக்கு நீங்கள் வன்னி மரத்தை வாங்கி தானம் செய்ய வேண்டும். அப்படியே நர்சரியில் இருந்து வாங்கிக் கொண்டு போய் சிவன் கோவிலில் வைத்து விட்டு வரக்கூடாது.
வன்னி மரத்தை வாங்கி உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். சின்னதாக இருக்கும் வன்னி மரத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றி அரசாங்க வேலை வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். வன்னி மரம் ஓரளவிற்கு பெருசாக வளர வேண்டும். குட்டியாக குழந்தையாக இருக்கும் வன்னி மரம் ஓரளவுக்கு வளர்ந்து நிற்கிறது. இதை பூமியில் வைத்தால் நன்றாக வளரும் என்ற ஒரு நிலைமை வரட்டும். அதுவரைக்கும் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை கொஞ்சம் கோதுமையை எடுத்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த தண்ணீரை மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டினால் வெள்ளை நிறத்தில் பால் கிடைக்கும் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த பாலை, இந்த வன்னி மரத்திற்கு கொஞ்சமாக ஊற்றி எனக்கு கட்டாயம் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்று நம்பிக்கையுடன் வேண்டுங்கள். வாரத்தில் ஒரு நாள் இந்த கோதுமை பாலை அந்த வன்னி மரத்திற்கு விட்டால் போதும்.
மூன்று மாதம் இந்த செடி உங்கள் வீட்டில் ஓரளவுக்கு வளர்ந்து விட்டது என்ன செய்யலாம். வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு இந்த வன்னி மரத்தை தானம் கொடுக்க வேண்டும். ஒரு ஆளை வைத்து மண்ணைத் தோண்டி புதையுங்கள். முடிந்தால் உங்களுக்கே மன்னித்தோண்டி புதைக்க முடியும் என்றால் புதைத்து அந்த செடி வளர்வதற்கு தேவையான வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும்.
தினமும் அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றுவது அந்த செடியை பராமரிப்பது போன்ற விஷயங்களை நீங்கள் கவனித்துக் கொள்ள, அந்த கோவில் அர்ச்சகர் இடம் அனுமதி வாங்க வேண்டும். அந்தச் செடி மரமாக நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். மேலே சொன்ன இத்தனை விஷயமும் நடந்தால் உங்களுக்கு நிச்சயம் அரசாங்க வேலை கிடைக்கும். இதற்கு கொஞ்சம் சிரமப்பட்டு தானே ஆக வேண்டும். மேலே சொன்ன விஷயங்களை அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது.
இதையும் படிக்கலாமே: மஹாளய அமாவாசை இரவு செய்ய வேண்டிய பரிகாரம்
உங்களுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்றால் மேலே சொன்ன பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். கட்டாயம் அரசாங்க வேலை உங்கள் வீடு தேடி வரும். அப்பாயின்மென்ட் ஆர்டரை கையில் வாங்கி விடுவீர்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்