இந்த பரிகாரத்தை செய்தால் அரசாங்க வேலை கிடைப்பது உறுதி! அதுவும் வெறும் 27 நாட்களில்.

surya

நிரந்தரமான வருமானம், கௌரவமான வேலை, வசதியான வாழ்க்கை இது மூன்றும் இருந்தால் போதாதா? வாழ்க்கையை எந்த ஒரு போராட்டமும் இல்லாமல் நடத்திச் செல்வதற்கு! அந்த கவுரவமான வேலை, நிரந்தரமான வருமானம் என்பது அரசு சம்பந்தப்பட்ட வேலையாகத்தான் நிச்சயமாக இருக்க முடியும், அல்லது சொந்தத் தொழில் செய்து வந்தாலும் அது அவர்களுக்கு நிரந்தர வருமானத்தை கொடுக்கும். எதுவாக இருந்தாலும் நேரம் சரியில்லை என்றால் நம்முடைய வருமானத்திற்கு தடை வந்தே தீரும். அது வேறு விஷயம். அதை விட்டுவிடுவோம். இப்போது உங்களுக்கு நிரந்தரமான வேலை, அதுவும் அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்றாலும், அல்லது அரசாங்க வேலையில் பணிபுரிந்து கொண்டு முன்னேற்றம் இல்லாமல் சில பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும், இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக கைமேல் பலனை பெற முடியும்.

அந்த பரிகாரம் என்ன? அதை எப்படி செய்வது என்பதை பற்றிய ஆன்மீக ரீதியான தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் இந்த பரிகாரத்தை தொடங்குவதற்கு உங்களுக்கு முருங்கை மரத்தின் வேர் அவசியம் தேவை. முருங்கை மரத்தின் வேரை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரத்தை தொடங்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய உதயத்தின் போது, அதாவது காலை 6 மணிக்கு பரிகாரத்தை தொடங்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சிறிய வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு, பச்சை நிறப் பேனாவை வைத்து, உங்களுக்கு ‘அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். ஓம் சூரிய தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை அந்த வெள்ளைக் காகிதத்தில் எழுதி தயாராக எடுத்து வைத்திருக்கும் முருங்கை வேரை அதில் வைத்து மடித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிடுங்கள்.

murungai-maram

பரிகாரத்தை தொடங்கும் போது மட்டும் சூரிய உதய சமயத்தில் தொடங்கினால் போதும். மற்ற வரக்கூடிய 27 நாட்களில், காலை அல்லது மாலை நேரம், உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது தீபம் ஏற்றி தூபம் காட்டி உங்கள் குறிக்கோளை மனதில் நினைத்து சூரிய பகவானிடம் வேண்டுதல் வைத்துக் கொள்ளலாம் அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

- Advertisement -

இது அப்படியே உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கட்டும். தொடர்ந்து 27 நாட்கள் இந்த பாட்டிலை உங்களது குறிக்கோளாக நினைத்து,  ஒரு தீபம் ஏற்றி ஊதுபத்தி காட்டி வழிபட வேண்டும். அவ்வளவு தான். சூரிய பகவானை நினைத்து வழிபாடு செய்யுங்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த 27 நாட்களும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது.

surya-grahanam

இதோடு சேர்த்து சூரிய உதயத்திற்குப் பின்பு சூரிய பகவானின் ஒளிக்கதிர் பூமியில் படும் நேரத்தில், வாயில்லா ஜீவன்களுக்கு ஏதாவது ஒரு வழியில் நீங்கள் பசி ஆற்ற வேண்டும். ஆடு, மாடு, நாய், எரும்பு, எதற்கு வேண்டுமென்றாலும் உணவினை போடலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். 27 நாட்களும் சூரிய ஒளி படும் இடங்களில் இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு சாப்பாட கொடுத்து வரவேண்டும்.

surya-bhagavan

நீங்கள் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்து ஏதாவது ஒரு காரணத்தினால் அந்த வேலை தடைபட்டுக் கொண்டே வரும் பட்சத்தில், அல்லது அரசாங்க வேலையில் உங்களுக்கு, உங்களது மேல் அதிகாரிகளால் தொல்லை இருக்கும் பட்சத்தில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலனை அடைய முடியும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். 27 நாட்கள் முடிந்ததும் பாட்டிலின் உள்ளே இருக்கும் பேப்பரையும் வேரையும் ஓடும் தண்ணீரில் விட்டு விடலாம் அல்லது கால் படாத இடங்களில் சூரியடுவிடலாம். சூரிய பகவானின் ஆசீர்வாதத்தை நேரடியாக பெற்றுத்தரக்கூடிய சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே
வரும் வெள்ளிக்கிழமை(19/2/2021) இப்படி குளித்தால் 7 வகையான பாவங்கள் நீங்கி நிறைய நன்மைகள் நடைபெறுமாம்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.